Entertainment

இதுதான் காட்டுப்பசியோ.. யப்பா 25 வயசு பையனாவே மாறிட்டாரே.. வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்..!

மார்ச் 18ம் தேதி பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கடைசியாக விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா அங்கே வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சமீபத்தில் எளிமையான முறையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பத்து தல படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், இயக்குநர் ஒபெலி கிருஷ்ணா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர். சிம்பு அந்த விழாவுக்கு வரவில்லை. அதற்கான காரணத்தையும் இயக்குநர் அங்கேயே கூறியிருந்தார்.

Advertisement

பேங்காக்கில் நடிகர் சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்து வருவதாக கூறினர். இந்நிலையில், செம டிரான்ஸ்ஃபர்மேஷன் உடன் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் சிம்பு. இனிமேல், உடம்பை ஏற்றுவது, குறைப்பது எல்லாம் தனக்கு கை வந்த கலை என்பது போல மாஸ் போஸ் கொடுத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்திற்காக 19 வயது இளைஞராக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய சிம்பு, பத்து தல படத்துக்காக அதிக எடை போட்ட நிலையில், தற்போது மீண்டும் செம ஸ்மார்ட்டாக டிரான்ஸ்ஃபார்ம் ஆகி உள்ள லேட்டஸ்ட் போட்டோவை போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Advertisement

வந்தா ராஜாவா தான் வருவேன், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் உடல் எடை கூடியிருந்த சிம்பு, ரசிகர்களால் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டார். ஆனால் ஈஸ்வரன் படத்தில் உடல் எடையை குறைத்து கம் பேக் கொடுத்த சிம்பு, மாநாடு மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து அனைவரையும் திரும்பி வைத்துள்ளார். தற்போது காட்டு பசியில் இருப்பதாக சிம்பு கூறியிருந்த நிலையில், அதற்கேற்க உடல் எடையை ஏற்றி இறக்கி வித்தியாசம் காட்டி இருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top