Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentஅயோத்தி வெளியாகி ஓராண்டு நிறைவு.. 2வது படத்தை எடுக்க முடியாமல் திண்டாடும் இயக்குநர் மந்திர மூர்த்தி!

அயோத்தி வெளியாகி ஓராண்டு நிறைவு.. 2வது படத்தை எடுக்க முடியாமல் திண்டாடும் இயக்குநர் மந்திர மூர்த்தி!

சசிக்குமார், குக் வித் கோமாளி புகழ், நடிகை பிரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அயோத்தி. உத்தரப் பிரதேச மாநில அயோத்தியில் இருந்து புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரம் வரும் வட இந்திய குடும்பத்தினர், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கொள்வார்கள். இந்த விபத்தில் நாயகியின் அம்மா இறந்துவிட, எப்படி மீண்டும் ஒரே நாளில் சொந்த ஊர் செல்கிறார்கள் என்பதே கதையாகும்.

- Advertisement -

தீபாவளி தினத்தன்று எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில், சசிக்குமாரும் அவரது நண்பர் புகழும் இணைந்து உதவி செய்வதே திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கும். தாய் இறந்த பின்னரும் அதே ஆணாதிக்க மற்றும் போலி சம்பிரதாயங்களை நம்பிக் கொண்டு முரண்டு பிடிக்கும் தந்தையை வைத்து கொண்டு அவரின் மகள் படும் கஷ்டங்கள் அனைவருக்கும் எளிமையாக புரியும்படி காட்சிகள் அமைந்தது.

சாதாரணமாக ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என்று ஒரு பெண் கேட்பதை காட்சியாக வைத்து தமிழ்நாட்டிற்கும், வட இந்தியாவிற்கும் உள்ள வேற்றுமையை உணர்த்தியதற்காகவே இயக்குநர் மந்திர மூர்த்தியை பலரும் பாராட்டினார்கள். இறுதியாக இந்துத்துவத்தை நம்பும் ஒருவருக்கு எந்தவித பிரதபலனும் பாராமல் உதவி செய்யும் இஸ்லாமியராக காட்டி மனிதமே மிகப்பெரிய என்று அனைவரையும் உருக வைத்தார் இயக்குநர்.

- Advertisement -

சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் அயோத்தி திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் வெற்றி மாறன் பேசி இருந்தார். இதனால் இயக்குநர் மந்திர மூர்த்தியின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் சில நாட்களாக அயோத்தி திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டதை அப்படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கொண்டாடினார்கள்.

- Advertisement -

ரசிகர்களும் அயோத்தி படம் மிகச்சிறந்த ஒன்று என்று வாழ்த்தினார்கள். ஆனால் அயோத்தி திரைப்படம் வெளியாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில், இயக்குநர் மந்திர மூர்த்தி தனது இரண்டாவது படத்தை எடுக்க தயாரிப்பாளர் கிடைக்காமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இப்படியொரு படத்தை எடுத்த இயக்குநருக்கா இப்படி நிலைமை என்று பலரும் ஆறுதல் கூறி வருகிறார்.

Most Popular