சினிமா

திரையரங்கில் இருந்து தூக்கப்படும் பகாசூரன்..! போதிய வரவேற்பில் இல்லாமல் தோல்வி

சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் மோகன் ஜி எடுத்துள்ள திரைப்படம் தான் பகாசுரன். இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நடராஜன் ஆகியோர் ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வழக்கம் போல் பெண் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை மோகன் ஜி கூறியுள்ளார்.

Advertisement

மேலும் முந்தைய படங்களைப் போல பல அரசியல் குறியீடுகளை வைக்கிறேன் என்ற பெயரில் படத்தின் கதையில் கோட்டை விட்டுள்ளார். இதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு மக்கள் மத்தியில் எழவில்லை. மேலும் முதல் நாள் முதல் காட்சி மட்டும் எங்கிருந்தோ கூட்டம் வர அடுத்த காட்சிக்கு திரையரங்கில் ஆள் இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் ரெட்ஜெய்ன்ஸ் நிறுவனத்துடன் முறையிட்டுள்ளனர். டாடா திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை தூக்கிவிட்டு பகாசூரனை போடும் முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பல்வேறு திரையரங்குகளில் பகாசூரன் திரைப்படம் தூக்கப்பட்டு டாடாபடமே மீண்டும் போடப்பட்டுள்ளது

Advertisement

மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பகாசூரன் திரைப்படத்திற்கான காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் சர்ச்சை கருத்துக்களை கூறியிருந்த நிலையில் அதே பார்முலாவை பயன்படுத்தி பகாசூரன் எடுக்கப்பட்டது. எனினும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் செல்வராகவனை வைத்து பட குழுவினர் விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக செல்வராகவன் நடிப்பு சிறப்பாக இருப்பதாக கூறி பல திரைப்பட நட்சத்திரங்கள் சமூக வலைத்தளத்தில் ட்வீட் போட்டு வருகின்றனர். இது ஒரு வகையான விளம்பரமாக பார்க்கப்பட்டாலும் திரையரங்கில் படம் தூக்கப்பட்டதால் இது தாமதமான முடிவு ஆக அமைந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top