Monday, April 29, 2024
- Advertisement -
HomeUncategorizedஒடிடியில் வரும் வருமானத்தை எங்களுக்கு தாருங்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

ஒடிடியில் வரும் வருமானத்தை எங்களுக்கு தாருங்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

ஓ டிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு வரப் பிரசாதமாக இருந்தாலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அது போதாத காலமாகவே இருக்கிறது. எவ்வளவு நல்ல படம் வந்தாலும் அதை ஒடிடிய பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ரஜினி, விஜய், அஜித் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் படம் மட்டும்தான் திரையரங்குகளில் ஓடுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வினோத கோரிக்கைகளை வைத்து இருக்கிறது.

அதன்படி ஓடிடியின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு வரும் வருமானத்தை ஒரு பகுதியை திரையரங்குகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது எந்த அளவில் நியாயம் என்று யாருக்குமே புரியவில்லை.

- Advertisement -

மற்றொரு கோரிக்கையாக புதிய திரைப்படங்கள் வெளிவந்து எட்டு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆகவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ரஜினி விஜய் அஜித் போன்ற நடிகர்கள் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு திரைப்பட சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

- Advertisement -

விளம்பர போஸ்டர்களுக்கு ஒரு சதவீதம் பப்ளிசிட்டிக்காக விதிக்கப்படும் பணத்தை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோன்று தமிழக அரசுக்கு அவர்கள் அளித்துள்ள கோரிக்கையில் திரையரங்குகளுக்கான சொத்து வரி மற்றும் மின்சார கட்டணத்திலிருந்து சலுகை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோன்று திரையரங்குகளை பராமரிப்பதற்காக தனி கட்டணத்தை பார்வையாளர்களிடமிருந்து வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று திரையரங்குகளில் வர்த்தக நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

திரையரங்குகளில் மக்கள் வரும் கூட்டம் குறைய தொடங்கி விட்டாலும் அதற்கென்று இவர்கள் வைக்கும் கோரிக்கை சிரிப்பை தான் வர வைக்கிறது என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து கொள்கிறார்கள்.

Most Popular