Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentபாலிவுட் சினிமாவில் நல்ல அரசியல் படங்களே வருவதில்லை.. தமிழ் சினிமா அப்படியல்ல.. ஓபனாக உடைத்த வெற்றிமாறன்.....

பாலிவுட் சினிமாவில் நல்ல அரசியல் படங்களே வருவதில்லை.. தமிழ் சினிமா அப்படியல்ல.. ஓபனாக உடைத்த வெற்றிமாறன்.. மிரண்ட கரண் ஜோஹர்

விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை – 1 உள்ளிட்ட படங்களின் மூலமாக பல்வேறு நுணுக்கமான அரசியலை சினிமாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன். அதேபோல் இயக்குநர்கள் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், லெனின் பாரதி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தங்களின் கதைகள் மூலமாக அரசியல் பேசி கொண்டே இருக்கின்றனர்.

- Advertisement -

மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் தமிழ்நாட்டில் பேசி வரும் அரசியல் அளவிற்கு வேறு எந்த சினிமாவிலும் பேசப்படுவதில்லை. இதுகுறித்து பிரபல யூட்யூப் சேனலில் இயக்குநர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, தமிழ் சினிமாவில் தான் கடந்த 50க்கும் அதிக ஆண்டுகளாக திரையில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் சூழல் உள்ளது.

தமிழ் சினிமாவை தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் அது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தனிமனித பிரச்சனைகள் மூலமாக மிகப்பெரிய அரசியல் பேசுவதை எப்போதும் பாராட்டுவோம். ஆனால் அண்மை காலங்களில் அரசியல் சார்ந்த, தனிமனிதர்கள் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய படங்கள் பாலிவுட்டில் வருவதில்லை.

- Advertisement -

அண்மை காலங்களில் பாலிவுட்டில் நல்ல அரசியல் படமே வரவில்லை என்று நினைக்கிறேன். கொரோனாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவுக்கு மிகச்சிறந்த காலமாக உள்ளது. மக்கள் திரையரங்குகளில் படங்களை அதிகமாக கொண்டாட தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல் இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப படங்களை எடுக்கும் போது கூடுதலாக மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

சமீப காலங்களில் பாலிவுட் இணைய தொடர்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தேசப்பற்று அல்லது வெளிநாடு வாழ் இந்திய பணக்காரர் என்ற அடையாளத்துடன் மட்டுமே வெளியாகிறது. இதனால் பாலிவுட் படங்கள் அதிகளவில் தோல்வியை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular