சினிமா

போடு சூப்பர் ! போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே !

Love today hindi remake

தமிழில் இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வசூல் வேட்டை செய்த படம் லவ் டுடே. மறக்கக் கூடாது, படம் வெளியான வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவி தியேட்டரில் மாலை 6 மணிக் காட்சிக்கு சென்னை மவுண்ட் ரோட்டில் மக்கள் அலை திரண்டியது. கோமாளி திரைப்பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். தானே நடித்து இயக்கிய இந்தப் படம் இக்கால இளைஞர்களை வசமாக்கி வெற்றிப்படமாக உருவானது. பெருவாரியான பார்வையாளர்களின் இந்த ஆண்டின் டாப் 3 சிறந்த தியேட்டர் அனுபவத்தில் லவ் டுடே இடம்பெற்றுள்ளது.

தமிழில் மெகா ஹிட்டான ஒரு வாரம் கழித்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. இத்தகு பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் அடுத்து ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தென்னிந்திய திரைப்படங்கள் பல இந்த ஆண்டு பாலிவுட்டில் ரீமேக் ஆகியன. அதே போல இந்த வெற்றிபப்டதையும் அவர்கள் விடவில்லை.

காதலன் & காதலி இருவரும் காதலியின் தகப்பனார் சொள்ளின்படி தங்களது ஸ்மார்ட் போனை மாற்றிக் கொள்கின்றனர். இருவரின் பெர்சனல் விசியங்கள் மூலம் பல வித சண்டைகள் இருப்பினும், இறுதியில் அவர்கள் எப்படி ஒன்றாக சேர்கிறார்கள் என்பது தான் கதை. நாள்தோறும் காணும் மீம்ஸ்கள், டிரோல்கள் எல்லாம் கூடச் சேர்த்து நகைச்சுவை படமாக தொடர்ந்தார் பிரதீப். கதாநாயகியாக இவானா சிறப்பான பணியைச் செய்தார். படத்தின் இசை மிகப் பெரிய பிளஸ், முக்கியமாக மாமாக்குட்டி பிஜிஎம் டாப் கிளாஸ். பாடலில் சொன்னது போல பிரதீப் – யுவன் காம்போ ஹிட் தான்.

ஹிந்தி ரீமேக்

இந்த ஆண்டு இரண்டு ஹிந்தி படங்களை தமிழில் ரீமேக் ( நெஞ்சம் மறப்பதில்லை, வீட்ல விசேஷம் ) செய்து வெற்றிக் கண்ட மற்றும் துணிவு படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், அடுத்து லவ் டுடே படத்தை ரீமேக் செய்யவுள்ளார். தமிழில் இப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு பல கோடிகள் கொடுத்து ரீமேக் உரிமம் வாங்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் இப்படத்தை டேவிட் தவான் இயக்குகிறார். கதாநாயகனாக வரும் தவான் சிறப்பிக்கவுள்ளார். இவானவின் ரோலை நிரப்பப்போவது யார் என்று இன்னும் தெரியவில்லை. தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகின்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top