Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainmentகேப்டன் மில்லர் வருவதற்கு இன்னும் 40 நாட்களே இருக்கு… முக்கியமான விஷயத்தை பகிர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்த...

கேப்டன் மில்லர் வருவதற்கு இன்னும் 40 நாட்களே இருக்கு… முக்கியமான விஷயத்தை பகிர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்த அருண் மாதேஸ்வரன்…

தமிழ் சினிமாவில் ரத்தமும் சதையுமாக படம் எடுப்பதில் ஊறிப் போனவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். இப்படி கூறுவதற்கு, அவரின் முதல் திரைப்படமான ராக்கி திரைப்படத்தையே எடுத்துக்காட்டாக முன் வைக்கலாம். வசந்த் ரவி பாரதிராஜா ஆகியோர் நடித்த இந்த திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் படத்தில் வன்முறை காட்சிகள் மிக தூக்கலாக இருந்ததால், இளைஞர்களின் விருப்பப்படமாக அது மாறியது.

- Advertisement -

குறிப்பாக குடலை உருவி மாலையாக போடும் காட்சிகளை எல்லாம் வைத்து, முகம் சுளிக்க வைத்திருந்தார் அருள் மாதேஸ்வரன். ஆக்சன் திரைப்படம் என்றாலும் அதில் ஏன் இத்தனை வன்முறை காட்சிகள் என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இப்படியான சூழலில்தான், கீர்த்தி சுரேஷ் செல்வராகவன் ஆகியோரை வைத்து சாணிக்காயிதம் படத்தை எடுத்திருந்தார் அருண் மாதேஸ்வரன்.

இதற்கு முந்தைய திரைப்படமே பரவாயில்லை என்பது போல வன்முறை காட்சிகள் அதிகம் அதில் இடம் பெற்றிருந்தது. சாதாரண பழிவாங்கும் திரைப்படமாக எடுக்கப்பட்ட இதில், கீர்த்தி சுரேஷ் செல்வராகவன் இருவரும் ரத்தம் தெறிக்க ஒவ்வொருவரையும் கொலை செய்யும் காட்சி, காண்போரைக் குலை நடுங்க செய்தது. ஓடிடி தளத்தின் நேரடியாக இந்த திரைப்படம் வெளியானதால், எதிர்பார்த்த வெற்றியை இது பெறவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் தனது மூன்றாவது திரைப்படத்திற்காக தனுஷ் உடன் இணைந்துள்ளார். கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இதை டீசர் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அது குறித்த சில தகவல்களை அருண் மாதேஸ்வரன் வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர், கேப்டன் மில்லர் வெளியாவதற்கு இன்னும் 40 நாட்களே உள்ளன. விரைவில் படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளோம். தனுஷ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு ட்ரீட்டாக இருக்கும். கேப்டன் மில்லர் திரைப்படம் குறிப்பிட்ட சமூகத்திற்குள் இருந்த அடிமைத்தனத்தையும், ஆங்கிலேயர்கள் நம்மை அடிமையாக வைத்ததையும் எடுத்துக் கூறுகிறது. மிகப்பிரமாண்ட முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகப்பெரிய இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்

இதனால் நேரு உள்விளையாட்டரங்கில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ரஜினி கமல் விஜய் ஆகியோரின் திரைப்பட நிகழ்ச்சிகள் தான் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா அங்கு நடைபெற்று அதன் போக்கை மாற்றியது. இந்த நிலையில் தற்போது தனுஷின் பட நிகழ்ச்சியும் அங்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Most Popular