Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாசின்னத்திரை நடிகை சித்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த- பிரபல இயக்குனர்

சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த- பிரபல இயக்குனர்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொடரின் மூலம் நாம் எல்லாருக்கும் அறிமுகமானவர் நடிகை சித்ரா. நாம் அனைவருக்கும் முல்லையாக தெரியப்பட்ட அவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார் பாண்டியன் ஸ்டோர் இயக்குனர் சிவா சேகர்.

- Advertisement -

தொகுப்பாளராக தனது வாழ்வை ஆரம்பித்த வி.ஜே சித்ரா கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இருந்தும் இன்று வரை அவரை ரசிகர்கள் அனைவரும் நினைவில் கொண்டு உள்ளார்கள். வருடா வருடம் ரசிகர்கள் அனைவரும் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவை முல்லையாக அறிமுகம் செய்த இயக்குனர், சிவா சேகரும்,வருடா வருடம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார். முல்லையின் பிறந்த தினமான இன்று சிவா சேகர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சிவா சேகர் அந்த பதிவில் ” அவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரசிகர்கள் அவருக்கு பரிசு பொருட்களை அனுப்புவார்கள். அவர்களுக்கு மறக்காமல் நன்றியும் கூறி வந்தவர் சித்ரா. ஆனால் அப்படி ஒரு நிகழ்வு மீண்டும் நடக்கப் போவதில்லை. என்று தெரிந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுவதாக கூறி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா” என்று வி ஜே சித்ராவுக்கு இயக்குனர் சிவாசேகர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த இயக்குனரும் ரசிகர்கள் வரிசையில் கடந்த இரண்டு வருடங்களாக தவறாமல் வீஜே சித்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இதற்கொள்ளாம் காரணம் என்னவென்று பார்த்தால்,சீரியலில் படு பிஸியாக இருந்தாலும் நடிகை சித்ரா எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் அதிகமாக தொடர்பு கொண்டு இருந்தவர்.அவருக்கு வாழ்த்துக்கள் கூறும் அனைவருக்கும் தவறாமல் நன்றி சொல்வதை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. இதனால் என்னவோ அவர் மறைந்த பிறகும் ரசிகர்கள் யாரும் அவரை மறக்க முடியாமல், இன்றும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, அவருடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

Most Popular