Saturday, September 14, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்னா ஸ்டைலா இருக்காரு விக்ரம்.. கவுதம் மேனன் மிரட்டி விட்ருக்காப்ல.. பட்டையை கிளப்பும் துருவ நட்சத்திரம்...

என்னா ஸ்டைலா இருக்காரு விக்ரம்.. கவுதம் மேனன் மிரட்டி விட்ருக்காப்ல.. பட்டையை கிளப்பும் துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. இம்முறை மிஸ் ஆகுதாம்!

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். 4 ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பின்னர் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக பாதியிலேயே படம் நிறுத்தப்பட்டது. ஆனால் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர், பாடல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படம் குறித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். இதனிடையே தங்கலான் படத்தின் பணிகளை முடித்து கொடுத்த பின், நடிகர் விக்ரம் மீண்டும் துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்தார். இதனைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தில் நடித்த ராதிகா, டிடி, ரிது வர்மா உள்ளிட்டோர் தங்களது பணிகளை செய்து கொடுத்தனர்.

இதனால் துருவ நட்சத்திர படம் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் கவுதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதல் காட்சிகளோடு தொடங்கும் ட்ரெய்லர், பின்னர் ரகசியமாக ஒரு உளவு அணியை அமைப்பது குறித்து சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தின் வில்லனான விநாயகனின் அசத்தலான வசனங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் டச், விக்ரமின் மாஸ் என்று ட்ரெய்லர் பட்டாசாக வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து 10 நாட்களுக்கு பின் படம் வருவதால், சோலோ ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் கவுதம் மேனன் ஸ்டைலிஷான படத்தை இயக்கி இருப்பதால், படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Most Popular