Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentவெந்து தணிந்தது காடு… கமல் சாருக்கு வணக்கத்தை போடு… ஆரம்பத்திலேயே அதகளம் செய்யும் கூல் சுரேஷ்…...

வெந்து தணிந்தது காடு… கமல் சாருக்கு வணக்கத்தை போடு… ஆரம்பத்திலேயே அதகளம் செய்யும் கூல் சுரேஷ்… இனி பிக் பாஸ் வீடு என்ன ஆகப்போகுதோ…

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக தன்னை காட்டிக் கொள்பவர் கூல் சுரேஷ். ஆரம்பத்தில் இருந்தே அவர் கூடவே இருக்கும் கூல் சுரேஷ், சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் உடனும் இருப்பார். நடிகர் சந்தானத்துடன் இணைந்து சில திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஒருமுறை டி ராஜேந்தர் செய்தியாளர் சந்திப்பின் போது, உரக்க கத்தி மீம்ஸ் கிரியேட்டர்களின் டெம்ப்லேட் பாயாக மாறினார்.

- Advertisement -

இளையதளத்தில் அவர் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம், ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அதைப் பற்றி திரையரங்கு வாசலிலே விமர்சனம் கூறுவதுதான். சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதற்கு காரணம் கூல் சுரேஷ். அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, எங்கு செய்தியாளர்களை சந்தித்தாலும் வெந்து தணிந்தது காடு, சிம்புவிற்கு வணக்கத்தை போடு என்று கூறியே பேச ஆரம்பிப்பார்.

இப்படி தயாரிப்பு நிறுவனத்தையும் தாண்டி, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அவர் ப்ரொமோட் செய்தார். அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி ஆன பிறகு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேசை அழைத்து செல்போனை பரிசாக வழங்கினார். இதைத்தொடர்ந்து, எந்த திரைப்படம் வெளியானாலும் அதை முதல் நாள பார்த்துவிட்டு செய்தியாளர்கள் பேட்டி என்கிற பெயரில் அலப்பறை கொடுக்க ஆரம்பித்தார் கூல் சுரேஷ்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக வெள்ளை குதிரையை வாடகைக்கு வாங்கி வந்து கவனம் ஈர்த்த அவர், மார்க் ஆண்டனி படத்தை பார்த்துவிட்டு அனகோண்டா பாம்பு பொம்மையை கையோடு எடுத்து வந்தார். அப்போது படத்தில் விஷால் அருமையாக நடித்திருப்பதாக கூறி, அனகோண்டாவின் முத்தமிட்டு பகீர் கிளப்பினார்.

- Advertisement -

சமீபத்தில் மன்சூர் அலிகான் சரக்கு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், யாரும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளினிக்கு மாலை போட்டு சர்ச்சையில் சிக்கினார். பலரையும் முகம் சுளிக்கும் வகையில் செயல்பட்ட கூல் சுரேஷ், தான் அவ்வாறு செயல்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார். இப்படி எப்போதும் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அவர், இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைந்துள்ளார்.

கமலை சந்தித்ததும் வெந்து தணிந்தது காடு கமல் சாருக்கு வணக்கத்தை போடு என்று அலப்பறை கூட்ட ஆரம்பித்தார். பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக கூல் சுரேஷ் சென்று இருக்கிறார். ஆரம்பத்திலேயே சக போட்டியாளர்களுடன் கேப்டன் பதவிக்கு கூல் சுரேஷ் மல்லுக்கட்டி வருகிறார். இதனால் வரும் நாட்களில், பிக் பாஸ் வீட்டை கூல் சுரேஷ் ஒரு வழி செய்வார் என பலரும் கூறி வருகின்றனர்.

Most Popular