Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentபாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னாருன்னு இப்போதான் தெரியுது… ஆதிபுருஷ் பார்த்து நொந்து போய் கமெண்ட் செய்த...

பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னாருன்னு இப்போதான் தெரியுது… ஆதிபுருஷ் பார்த்து நொந்து போய் கமெண்ட் செய்த கிரிக்கெட் வீரர் சேவாக்… விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள்

ஆதிபுருஷ் திரைப்படத்தை பார்த்துவிட்டு கிரிக்கெட் வீரர் சேவாக் சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவு பேசுபொருளாகியுள்ளது.

- Advertisement -

தோல்வி முகத்தில் பிரபாஸ்

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய புகழை அடைந்தார் . தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் பிரபலமானார்.

அதற்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படங்களின் மீது எல்லா மொழி ரசிகர்களும் ஆர்வம் காட்டி வந்தார்கள். பாகுபலிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற திரைப்படங்களில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியடைய விட்டாலும் ஓரளவு நல்ல வரவேற்பை தான் இந்த திரைப்படங்களும் பெற்றது.

- Advertisement -
Adipurush

ஆரம்பத்திலேயே அடிவாங்கிய ஆதிபுருஷ்

இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம்ராஜ் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தை நடித்திருந்தார். இது ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் மீது எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதுவெல்லாம் இந்த திரைப்படத்தின் உடைய டீசர் வெளியிட்ட பொழுதே போய்விட்டது.

- Advertisement -

இது திரைப்படத்தின் உடைய டீசரில் 3டி காட்சிகள் கேலிச்சித்திரம் போலிருக்கிறது என்று பல விமர்சனங்கள் வெளிவந்தது. இதில் விழித்துக் கொண்ட பட குழுவினர்கள் திட்டமிட்ட நேரத்தில் திரைப்படத்தை வெளியிடாமல் சிறிது காலம் எடுத்துக் கொண்டு டீசரில் இன்னும் பல திருத்தங்களை செய்து வெளியிட்டார்கள்.

அதற்கு பிறகு வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் இது திரைப்படம் எப்படி இருக்க போகிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் இருந்தது. இந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளியிடப்படும் எல்லா திரையரங்குகளிலும் அனுமருக்கென்று ஒரு சீட்டு ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் இயக்குனர் ஓம் ராவ் கோரிக்கை வைத்திருந்தார். இதுவெல்லாம் இத்திரைப்படத்தின் மீது இருந்த கொஞ்ச ஆர்வமும் முழுமையாக போகி விட்டது.

ஆதிபுருஷ்ஷை கிண்டல் செய்த சேவாக்

இந்த நிலையில் கடந்த பதினாறாம் தேதி திரைப்படம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட முதல் நாளை திரைப்படத்தின் உடைய வசூல் 100 கோடியை தாண்டி இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறாததால் ஆதிபுருஷ் வசூலை குவிக்க தவறியது. பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் இருக்கும் நிலையைக் கண்டு டிக்கெட்டின் விலையை குறைத்தும் ரசிகர்கள் திரைப்படம் பார்க்க எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. இதனால் திரைப்படம் படுதோல்வி அடைந்திருக்கிறது.

இப்படி இருக்க ஆதிபுருஷ் இப்போது சமூக வலைதளவாசிகளிடம் ட்ரோல் மேட்டரியல்லாக மாறியுள்ளது. இதில் படத்தை பார்த்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தெரிகிறது என கலாய்த்து பதிவிட்டுள்ளார். சேவாக்கின் இந்த பதிவு தற்போது இணையதளங்களில் உருவாகியுள்ளது.

Most Popular