Monday, October 7, 2024
- Advertisement -
HomeEntertainmentயோவ்… சந்தானம் இத்தனை நாளா எங்கய்யா இருந்த… தேடிப் போய் பாராட்டிய படக்குழு… பிளாக்பஸ்டர் ஹிட்...

யோவ்… சந்தானம் இத்தனை நாளா எங்கய்யா இருந்த… தேடிப் போய் பாராட்டிய படக்குழு… பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டிடி ரிட்டன்ஸ்

சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். வெள்ளித்திரையில் ஹிட் அடித்த திரைப்படங்களை தங்களுக்கே உண்டான பாணியில் ட்ரோல் செய்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த இந்த நிகழ்ச்சிக்கு, இப்போதும் ரசிகர்கள் உண்டு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலராலும் அறியப்பட்ட சந்தானம், சிம்புவின் மன்மதன் திரைப்படம் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார்.

- Advertisement -

தொடர்ந்து பொல்லாதவன், அறை எண் 305ல் கடவுள், அலெக்ஸ் பாண்டியன், கலகலப்பு, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிறுத்தை என ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரானார். இதையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், காமெடியை கை கழுவி விட்டு முழு நேர ஹீரோவாக களம் இறங்கி காமெடி செய்ய ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் சந்தானத்தின் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு பார்ட் 2, ஏ ஒன், பாரிஸ் ஜெயராஜ் போன்ற திரைப்படங்கள் வரவேற்பு பெற்றன. இருப்பினும் அதன் பிறகு ரிலீஸான அத்தனை படங்களும் தோல்வியை தழுவியதால், மீண்டும் நகைச்சுவை நடிகராகவே சென்று விடலாம் என்று எண்ணினார் சந்தானம். இந்த சூழலில்தான், சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தனது காதலியை காப்பாற்றுவதற்காக நடிகர் சந்தானம் மற்றும் அவர்களின் நண்பர்கள் பணத்தைத் திருட, அது எக்குத்தப்பாக ஒரு பங்களாவில் போய் சிக்கிக் கொள்கிறது. அந்த பங்களாவுக்கு சந்தானம் தனது காதலி மற்றும் நண்பர்களுடன் செல்ல, அங்கிருக்கும் பேய் ஒரு கேம் ஷோ நடத்துகிறது. இதில் அவர்கள் வெற்றி பெற்று தப்பினார்களா அல்லது பேய்க்கு பலியானார்களா என்பதை நகைச்சுவை கலந்த பாணியில் கூறியிருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.

- Advertisement -

ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், மாறன், முனிஸ் காந்த் என ஏராளமான படம் முழுக்க காமெடி சரவெடியை கொளுத்தி போட்டிருப்பதால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது டிடி ரிட்டன்ஸ். படத்திற்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பால், வசூல் மழை குவிந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால், படு குஷியில் இருக்கிறாராம் சந்தானம். சந்தானம் கேரியரில் இந்தத் திரைப்படம்தான் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் சந்தானத்தை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருவதால், டிடி ரிட்டன்ஸின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular