Wednesday, November 20, 2024
- Advertisement -
HomeEntertainmentதிடீரென காரைக்குடிக்கு விசிட் அடித்த தனுஷ்… என்ன சங்கதினு தெரியுமா…

திடீரென காரைக்குடிக்கு விசிட் அடித்த தனுஷ்… என்ன சங்கதினு தெரியுமா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் மிக முக்கிய இடம் வகிப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமாகி நடிப்பின் அசுரனாக வளர்ந்துள்ள இவர், இரண்டு முறை தேசிய விருதை பெற்றிருக்கிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. அதுவும், முதல் முறையாக தனுஷின் திரைப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

இதன் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் மற்றும் வாத்தி திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தையே பெற்றன. இப்படியான சூழலில் ராக்கி, சாணி காயிதம் எடுத்த அருண் மாதேஸ்வரனுடன் ஜோடி சேர்ந்தார் தனுஷ். கேப்டன் மில்லர் எனும் பெயரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சூட்டிங் பணிகள் முடிந்து
போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கன்னட பிரபலம் சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கென் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

சுதந்திரத்திற்கு முன்பு காலகட்டத்திலான ஜானரில் இந்த படம் எடுக்கப்படுகிறது. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லரிலிருந்து வெளியான டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. அவர் கெட்-அப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 15-ம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து தனது 50வது படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ்.

- Advertisement -

பவர் பாண்டியை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவரே இயக்கும் இந்த திரைப்படத்தில், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் என ஏராளமானோர் நடிக்கின்றனர். வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறதாம். இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு சூட்டிங் பணிகள் நடைபெற்றது. ஜூலை மாத இறுதியில் இதற்கான பணிகள் தொடங்க, முழுவீச்சில் படத்தை முடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார் தனுஷ்.

இதற்காக இரவு – பகல் பாராமல் பணிகள் நடைபெற்று வருகிறதாம். ஒவ்வொரு காட்சியையும் அவர் பார்த்து பார்த்து எடுத்து வருவதாக பேசப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றே மாதங்களில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கிறதாம். வடசென்னை பின்னணியான கதை என்பதால் செட் போடப்பட்ட இடங்களிலேயே பணிகளை முடித்திருக்கிறார் தனுஷ்.

தற்போது வெளியே சில காட்சிகளை எடுக்க வேண்டும் என்பதால் அவரை காரைக்குடியை தேர்ந்தெடுத்து உள்ளாராம். இதற்காக அங்கு முகாமிட்டிருக்கும் தனுஷ், மீதமுள்ள காட்சிகளை படமாக்கி வருகிறாராம். இந்த மாத இறுதியில் இந்த வேலைகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 50வது படத்தை முடித்துக் கொண்டு, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் அவர் கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Popular