Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஇவ்வளவு வேகமா.. எப்புட்ரா.. 50வது படத்தை இயக்கி முடித்த தனுஷ்.. அடுத்த படத்தின் இயக்க பணிகளும்...

இவ்வளவு வேகமா.. எப்புட்ரா.. 50வது படத்தை இயக்கி முடித்த தனுஷ்.. அடுத்த படத்தின் இயக்க பணிகளும் தொடங்கி விட்டதாம்.. யார் ஹீரோ தெரியுமா?

துள்ளுவதோ இளமை தொடங்கி அசுரன் வரை நடிகர் தனுஷின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. அதேபோல் கார்த்தி, விஷால் போன்றவர்களுக்கு கிடைக்காத ரசிகர்கள் பட்டாளமும் ஓபனிங்கும் தனுஷிற்கு மிக இள வயதிலேயே கிடைத்துள்ளது. அதற்கேற்ப செல்வராகவன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் உள்ளிட்டோருடன் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

- Advertisement -

தனுஷின் சினிமா வாழ்க்கையில் விஐபி திரைப்படம் மிகவும் முக்கியமானது. தனுஷின் 25வது படமான அந்த படம், அதிரி புதிரி ஹிட்டடித்தது. அதற்கு முன் வந்த படங்கள் பெரிதாக ஹிட்டாகாமல் இருந்த நிலையில், தைரியமான விஐபி தயாரித்ததோடு, நடித்தும் அசத்தினார். அந்த படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கினார்.

ஆனால் சினிமா வட்டாரத்தில் அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பணிகளை தனுஷ் மேற்கொண்டதாகவே பேசப்பட்டு வருகிறது. அதன்பின்னரே பா.பாண்டி படத்தை தனுஷ், ராஜ் கிரணை நாயகனாக வைத்து இயக்கினார். அந்த படம் இன்று ரசிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் தனுஷ் 25வது படத்தை போல் தனது 50வது படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், நித்யா மேனன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், பின்னர் சில வாரங்கள் காரைக்குடியில் நடைபெற்றது. அதன்பின் மீண்டும் கடந்த மாதம் சென்னையில் தொடங்கிய ஷூட்டிங், நேற்றுடன் மொத்தமாக முடிவடைந்துள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர் படமே இதுவரை ரிலீஸாகாத நிலையில், அடுத்த படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

குறுகிய காலத்தில் தனுஷ் நடித்து இயக்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு பின் நடிகர் தனுஷ் உடனடியாக இன்னொரு படத்தை இயக்க ஆயத்தமாக உள்ளார். அந்த படத்தில் தனுஷின் உறவினர் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகளையும் உடனடியாக தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular