Friday, April 4, 2025
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் பீரியாடிக் படத்தில் நடிக்கும் தனுஷ்… முதல் பாதிக்கான சூட்டிங் முடிஞ்சு போச்சாம்… யாருக்கும் தெரியாம...

மீண்டும் பீரியாடிக் படத்தில் நடிக்கும் தனுஷ்… முதல் பாதிக்கான சூட்டிங் முடிஞ்சு போச்சாம்… யாருக்கும் தெரியாம எப்படிதான் எடுத்தாங்க

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ராக்கி சாணி காகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை எடுத்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. தனுஷின் திரை உலக பயணத்திலேயே, மிகப்பெரும் பொருட்சளவில் இந்த படம் உருவாகிறது.

- Advertisement -

சுதந்திரத்திற்கு முந்தைய பீரியாடிக் திரைப்படம் என்பதால், அதற்கான செட்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டன. இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப்பகுதிகளிலும், மதுரை மற்றும் கடலூரின் சுற்றுவட்டார பகுதிகளிலும் நடைபெற்றது. இதில், பிரியங்கா மோகன், ஜான் கொக்கேன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிவராஜ்குமாருக்கு தனுஷின் அண்ணன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான டீசர் பலரையும் கவனம் பெற செய்தது. டீசரில் மூன்று விதமான கெட்டப்பில் வந்த தனுஷ், கையில் துப்பாக்கியுடன் பட்டையை கிளப்பி இருந்தார். இதே போல் பிரியங்கா மோகனம் கையில் துப்பாக்கியுடன் இருந்ததைக் கண்டு, ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

- Advertisement -

இதற்கான பேட்ச் ஒர்க் பணிகளுக்காக, படக்குழு ஊட்டி சென்றுள்ளது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, தனுஷ் தனது ஐம்பதாவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். வட சென்னையை மையப்படுத்தி எடுக்கும் இந்த திரைப்படத்தில், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்திப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி என ஏராளமான நடிக்க தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்த படத்திற்கு பிறகு, மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவுடன் தனுஷ் ஜோடி சேர்கிறார். ஏற்கனவே, இதற்கான படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெற்று விட்டதாகவும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் நாயகியாக ராஷ்மிகா மஸ்தானா நடிக்க, நாகர்ஜுனாவும் முக்கிய ரோலில் இடம் பெறுகிறார்.

ஏற்கனவே, பவர் பாண்டி திரைப்படத்தை தொடர்ந்து நான் ருத்ரன் என்னும் படத்தை தனுஷ் இயக்கினார். இதில் எஸ்ஜே சூர்யா, நாகர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்க பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தனுசுடன் நாகர்ஜூனா சேர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து இதுவும் பீரியாடிக் படமாக எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Popular