Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentதனுஷ், லோகேஷ் கனகராஜ், அனிருத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், நிவேதா.. சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த பிரபலங்கள்.....

தனுஷ், லோகேஷ் கனகராஜ், அனிருத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், நிவேதா.. சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த பிரபலங்கள்.. திக்குமுக்காடி போன ரசிகர்கள்!

சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை வரிசையாக சினிமா பிரபலங்கள் நேரில் வந்து கண்டு ரசிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், த்ரிஷா, மேகா ஆகாஷ், பிந்து மாதவி உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டிகளை கண்டு ரசித்த நிலையில், இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட நேரில் கண்டு ரசித்தனர்.

- Advertisement -

இதனை ஹாஷ்டேக்கிட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து அவரது போட்டோக்களை அதிகம் ஷேர் செய்தனர். நடிகர் தனுஷ் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் அனிருத் கிரிக்கெட்டை பார்த்த காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் டிரெண்டானது.

இதேபோல் நடிகை நயன்தாராவும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். ஆனால் போட்டியை கவனிக்காமல் அவரையே ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இதே போல் நடிகை நிவேதா பெத்துராஜும் சேப்பாக்கம் மைதானத்திற்கு விசிட் அடித்தார். திரை பிரபலங்களின் வருகையால் சேப்பாக்கம் மைதானம் களை கட்டியது.

- Advertisement -

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளில் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. 140 ரங்கல் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, நான்கு விக்கெட்டுகளை இழந்து 17.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி மும்பை அணியை ஊதி தள்ளியது.

- Advertisement -

Most Popular