Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாதனுஷ் பிறந்தநாளில் அடுத்தடுத்து 2 படங்களின் அப்டேட்.. !

தனுஷ் பிறந்தநாளில் அடுத்தடுத்து 2 படங்களின் அப்டேட்.. !

கோலிவுட் டாப் டயர் நடிகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக காணப்படுகிறார். அருண் மாத்தீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் எனும் படத்தில் ஒரு வருடத்திற்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வரலாற்றுக் கதைக்களம் கொண்ட இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

பல்திறன் கொண்ட தனுஷ் இதனையடுத்து தன் 50வது படத்தை தானே எழுதி இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் மல்டி ஸ்டாரர் வகையில் உருவாக்கப்படவுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தை கையில் எடுக்கின்றனர்.

- Advertisement -

தனுஷ் பிறந்தநாளில் டபுள் டிரீட்

வருகிற ஜூலை 28ஆம் தேதி தன் 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் தனுஷ் ரசிகர்களுக்காக அடுத்தடுத்த இரண்டு பெரிய ட்ரீட் தரவிருக்கிறார். முதலில் கேப்டன் மில்லர் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் வெளியாகவிருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் தெறிக்கும் இசையில் அருண் மாத்தீஸ்வரனின் கலையைக் காண பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன.

- Advertisement -

இதற்குப் பிறகு தன் இயக்கத்தில் ஆரம்பப் பணிகளை துவங்கியுள்ளது தனுஷ் பெரிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார். ஜூலை 28ஆம் தேதி தனுஷின் 50வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ் ஆகிறது. இந்த ஆண்டு தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் !

தனுஷ் 50 ஷூட்டிங்

கேப்டன் மில்லர் படத்தில் தன் காட்சிகளை நடித்து முடித்துவிட்ட தனுஷ் அடுத்தப் படத்தின் முதற் கட்ட பணிகளை துவங்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் கேப்டன் மில்லர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவில் முடித்துவிட்டு 50வது படத்தின் ஷூட்டிங்க்கு செல்லவிருக்கிறார். ஆகஸ்ட் அல்ல செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular