Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentஇளையராஜா வாழ்க்கை வரலாற்று படம்.. நாயகனாக நடிக்கும் தனுஷ்.. யார் இசையமைப்பாளர்?

இளையராஜா வாழ்க்கை வரலாற்று படம்.. நாயகனாக நடிக்கும் தனுஷ்.. யார் இசையமைப்பாளர்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ராயன். தனுஷ் நடித்து இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர்களான சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சரவணன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் குபேரா படத்தில் நடித்து வருகிறார். மும்பை தாராவியை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக இருந்து மிகப்பெரிய டான் அளவிற்கு உயரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது.

அதேபோல் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்கவுள்ளார். சொந்தமாக தயாரிக்கும் இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தக் கதையை நடிகர் தனுஷ் 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதிவிட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். இந்த போஸ்டரில் கிட்டார் இருப்பதால், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பாகவே நடிகர் தனுஷ் இளையராஜா வாழ்க்கையை மையப்படுத்திய கதையில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்த படத்தில் ஷமிதாப் படத்தை இயக்கிய பால்கி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாரி செல்வராஜ் படம், அருண் மாதேஸ்வரன் படம், வடசென்னை 2 உள்ளிட்ட படங்கள் தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதால், படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் இசையமைப்பாளராக யார் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Most Popular