Friday, April 4, 2025
- Advertisement -
HomeEntertainmentகேப்டன் மில்லர் இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ்… அத்தனை திரைப்படங்கள் ரவுண்ட் கட்டி இருக்கும் போதும்,...

கேப்டன் மில்லர் இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ்… அத்தனை திரைப்படங்கள் ரவுண்ட் கட்டி இருக்கும் போதும், அருண் மாதேஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுத்த பின்னணி என்ன?

வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இதற்கு இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

தென்காசி, கடலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், கேப்டன் மில்லர் என்பவர் ஆங்கிலேயர்களை எப்படி எதிர்த்தார் என்பதை விளக்கும் விதமாக படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கேப்டன் மில்லரில் இருந்து வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அடர்ந்த தாடியுடன், போர்க்களத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இருந்தார் நடிகர் தனுஷ். இந்தத் திரைப்படம், வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லராக இருக்கும் என்றும், எதிர்பார்த்த வெற்றியை பெரும் எனவும் தனுஷ் ரசிகர்கள் நம்பியுள்ளனர்.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, கேப்டன் மில்லரை முடித்துவிட்டு தனது அடுத்த படத்திற்கு சென்றிருக்கிறார் நடிகர் தனுஷ். அவரின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகும் இதில், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, தனுஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இதற்கான படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான செட் போட்டு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின்னர், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா உடன் தனுஷ் இணைய இருக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் படத்திலும் தனுஷ் பணிபுரிய இருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அவர், தற்போது மீண்டும் அருண் மாதேஸ்வரன் உடன் இணைந்து பணிபுரிய முடிவெடுத்துள்ளார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனமே இந்தப் படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லரில் இயக்குனரின் வேலையை பார்த்து வியந்த தனுஷ், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Most Popular