Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentதரமான சம்பவமா இருக்கும் போலயே.. கேப்டன் மில்லர் டீசருக்காக வந்த அப்டேட்.. போஸ்டரிலேயே கதிகலங்க வைக்கும்...

தரமான சம்பவமா இருக்கும் போலயே.. கேப்டன் மில்லர் டீசருக்காக வந்த அப்டேட்.. போஸ்டரிலேயே கதிகலங்க வைக்கும் தனுஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என்று நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தனது நடிப்பின் எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டே செல்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கதையில் சிக்கல் இருந்தாலும், தனுஷின் நடிப்பில் எந்த சிக்கலும் இல்லை. இதனால் தனுஷின் சினிமா வாழ்க்கை பல்வேறு உயரங்களை எட்டியுள்ளது.

- Advertisement -

அண்மையில் வெளியான நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களில் வெவ்வேறு வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். இதில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படங்களில் திரையரங்குகளிலேயே சக்கை போடு போட்டது. அதேபோல் தெலுங்கில் வாத்தி ரூ.118 கோடி கலெக்‌ஷன் செய்து அசத்தியது.

இதன்பின்னர் ராக்கி, சாணிக் காகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியது. இதில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது.

- Advertisement -

சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தனுஷ் மொட்டை போட்டு கெட்டப்பை மாற்றினார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 40வது பிறந்தநாளை நாளை மறுநாள் கொண்டாடவுள்ளார். இதனால் தனுஷின் பல்வேறு படங்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப கேப்டன் மில்லர் படத்தில் டீசர் வெளியாகும் என்று சத்ய ஜோதி நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டீசருக்கான அப்டேட்டாக தனுஷ் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்  தனுஷின் கேப்டன் மில்லர் டீசர் நாளை நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தலைமுடி, நீண்ட தாடியுடன் இருக்கும் தனுஷ் வித்தியாசமாக மிரட்டலாக இருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Most Popular