Monday, October 7, 2024
- Advertisement -
HomeEntertainmentபிரபாஸ், ஷாரூக் கான் படங்களால் தள்ளிப்போன கேப்டன் மில்லர்.. பொங்கலுக்கு களமிறங்கும் தனுஷ்.. அயலான், லால்...

பிரபாஸ், ஷாரூக் கான் படங்களால் தள்ளிப்போன கேப்டன் மில்லர்.. பொங்கலுக்கு களமிறங்கும் தனுஷ்.. அயலான், லால் சலாமுக்கு வரும் பிரச்சனை

நடிகர் தனுஷ் வாத்தி படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். தொடரி, பட்டாஸ், மாறன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் நான்காவது படம் இதுவாகும். இந்த படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் கேப்டன் மில்லர் படம் பிரம்மாண்ட உருவாகியுள்ளது. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தில் டீஸர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. நீண்ட முடி, தாடியுடன் வித்தியாசமான லுக்கில் நடிகர் தனுஷ் தோன்றி நடித்தது இதுவே முதல்முறையாகும்.

அதுமட்டுமல்லாமல் சினிமா நடிகர்களின் கனவு கதாபாத்திரமான புரட்சியாளர் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமான 1920களில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது. டீஸரில் எந்தவித பன்ச் வசனமும் இல்லாமல் தனுஷ் கண்கள் மூலமாக பல்வேறு கதைகளை ரசிகர்களுக்கு கடத்தினார்.

- Advertisement -

அதேபோல் கேப்டன் மில்லர் படம் டிச.15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேப்டன் மில்லர் படம் டிச15க்கு பதிலாக, அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

- Advertisement -

பொங்கல் பண்டிகைக்கு ஏற்கனவே அரண்மனை 3, அயலான், லால் சலாம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸை உறுதி செய்துள்ள நிலையில், கேப்டன் மில்லர் படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. டிசம்பர் 22ஆம் தேதி பிரபாஸின் சலார் மற்றும் ஷாரூக் கானின் டங்கி ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனால் கேப்டன் மில்லர் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Most Popular