Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentதுல்கர் சல்மான் படத்தில் துருவ் விக்ரம்.. கைகோர்த்து களமிறங்கும் வாரிசுகள்.. கிங் ஆஃப் கோதா படத்தில்...

துல்கர் சல்மான் படத்தில் துருவ் விக்ரம்.. கைகோர்த்து களமிறங்கும் வாரிசுகள்.. கிங் ஆஃப் கோதா படத்தில் சர்ப்ரைஸ்!

”ஆதித்யா வர்மா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகன் என்பதால், துருவ் விக்ரம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப ஆதித்யா வர்மா படத்தில் துருவ் விக்ரம் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பிற்கு இணையாக இல்லையென்றாலும், துருவ் விக்ரமின் நடிப்பு முதல் படத்திலேயே பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -

முதல் படத்தில் தந்தை இல்லாமல் களமிறங்கிய துருவ், இரண்டாவது படத்திலேயே தந்தைக்கு வில்லனாக மிரட்டினார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மஹான் திரைப்படத்தில் இளம் போலீஸ் அதிகாரியாக சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் ரசிகர்களை வியக்க வைத்தார். இதனால் அடுத்த தலைமுறை நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்பட்டார் துருவ் விக்ரம்.

இதன்பின் 2 ஆண்டுகளாக அமைதியாக இருக்கும் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் எந்தப் படத்திலும் இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இதனால் துருவ் விக்ரம் எங்கே போனார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக எழுந்தது.

- Advertisement -
Dhuruv

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள கிங் ஆஃப் கோதா படத்தில் துருவ் விக்ரம் சிறிய கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வடசென்னை பாணியில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் படமான கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதிலும் ரித்திகா சிங் ஆடியுள்ள பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்துள்ளது. அதில் துருவ் விக்ரம் கேமியோ ரோலில் நடித்துள்ளதை படக்குழு வெளியில் சொல்லாமல் அமைதி காத்து வந்தது. ஆகஸ்ட் 24ல் படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டது. தற்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளதால், கிங் ஆஃப் கோதா படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular