Entertainment

அஜித்தை விட விஜய் தான் நம்பர் 1 ஸ்டார்.. தில் ராஜூ அதிரடி பேச்சு

பொதுவாக தமிழ் சினிமாவில் தல தளபதி திரைப்படம் வெளியான பின்பு தான் மோதல் ஏற்படும். அதுவும் ரசிகர்களுக்கிடையே திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்களாலே மோதல்கள் ஏற்படும். ஆனால் இந்த முறை நீண்ட நாட்களுக்குப் பிறகு பொங்கலன்று தலைதளபதி இருவருடைய படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

Advertisement

இந்த நிலையில் இருவருடைய படத்தையும் திரையரங்குகளில் வெளியாக்குவதற்கு போதுமான திரையரங்கங்கள் இல்லை என்றும் அதற்காக மேலும் கூடுதலான காட்சி நேரமும் அதிகாலை காட்சியும் வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ஏற்கனவே தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வந்தது.

இந்த நிலையில்  தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் உடைய தயாரிப்பாளர் தில் ராஜு தமிழ் சினிமாவை பொறுத்தவரை தளபதி விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர்தான் நம்பர் ஒன் நடிகர் அவருக்கு அடுத்த இடத்தில் தான் நடிகர் அஜித் இருக்கிறார். அதனால் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்திற்க அதிக ஸ்கிரீன் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

இயக்குனர் வினோத் இயக்கும் நடிகர் அஜித் நடித்து வரும் துணிவு புகைப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி துணிவு திரைப்படத்திற்கு தேவையான திரையரங்குகளில் லாக் செய்வதன் பணியில் நான்கு மாதங்களுக்கு முன்பே ஈடுபட்டுவிட்டதாகவும் அதனால் அவருக்கு நிறைய ஸ்கிரீன்கள் கிடைத்து . இதனால்   தில் ராஜு தற்பொழுது எந்த ஒலிவும் மறைவும் இன்றி நேரடியாகவே தலை அஜித்தை விட தளபதி விஜய் தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் என்று பகிரங்கமாக பேசியிருந்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. நான் வாரிசுக்கு கூடுதல் ஸ்கிரீன்கள் தலை தளபதி திரைப்படங்களுக்கு வேண்டும் என்று உதயநிதியிடம் கேட்கப் போகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதை வைத்து தல தளபதி ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் இதைப்பற்றி பேசிக்கொண்டே இணையதளங்களில் மோதி வருகிறார்கள். இதனால் தல தளபதி ரசிகர்களுக்கு அவர்களின் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே அவற்றைப் பற்றியும் மோதல்களும் விமர்சனங்களும் ஆரம்பமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top