Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஅடுத்தடுத்து உச்சம் தொடும் அட்லீ.. விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கிறாராம்.. இயக்கம் யார் தெரியுமா?

அடுத்தடுத்து உச்சம் தொடும் அட்லீ.. விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கிறாராம்.. இயக்கம் யார் தெரியுமா?

ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திற்கு பின் இயக்குநர் அட்லீ-யின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகர்களும் அட்லீ-யின் அழைப்பிற்காக காத்திருக்கிறார்கள். அம்பானி மகன் திருமணத்தில் நடிகர் ரன்வீர் சிங், அட்லீயின் பிடித்து ஒப்பந்தம் செய்வதற்காக பாலிவுட் நடிகர்கள் கிரிக்கெட் ஃபீல்டர்கள் போல் இருப்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

ஜவான் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளம் பெற்ற அட்லீ, அடுத்த படத்திற்காக ரூ.40 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வருமானத்தை வைத்து தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக சில படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பேபி ஜான் என்ற படத்தை பாலிவுட்டில் தயாரித்துள்ளார்.

இந்த படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்காகும். இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் அட்லீ அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ஜவான் படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். தற்போது அட்லீ-யின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவரது 25வது படமான சீதக்காதி படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

இவர்களின் கூட்டணியில் இம்முறை வித்தியாசமான கமர்ஷியல் படத்தை இயக்க அட்லீ கதை கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சமீப காலங்களாக விஜய் சேதுபதி ஏராளமான படங்களில் நடிப்பதை குறைத்து தரமான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது அட்லீ தயாரிக்க முன் வந்துள்ளதால், ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular