சினிமா

மீண்டும் போலீஸ் கதையை இயக்கவுள்ள ஹரி.. ! ஹீரோ யார் தெரியுமா.. ?

Director Hari police stories

கோலிவுட்டில் ஆக்க்ஷன் மாசாலா திரைப்படங்களை கையாளுவதில் சிறந்தவர் இயக்குனர் ஹரி தான். 2002ஆம் ஆண்டு ‘ தமிழ் ’ திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதற்கடுத்து சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், வேங்கை, பூஜை, சிங்கம் 3 பாகங்கள், சாமி 2 மற்றும் யானை ஆகிய கமர்ஷியல் படங்களை தன் பெயருக்கு பின்னால் வைத்துள்ளார்.

பொதுவாக இவரது படங்களில் நல்ல ஆக்க்ஷன், காமெடி, சென்டிமென்ட் என குடும்பங்கள் மகிழ்ந்து பார்க்கும் அனைத்து உறுப்புகளும் இருக்கும். ஹரியின் படங்களில் பாடல்களும் சிறப்பாக இருக்கும், அதில் சிலவற்றுக்கு இவர் பாடல் வரிகளும் எழுதியுள்ளார்.

Advertisement

சிங்கம் 1,2,3 மற்றும் சாமி 1&2 படங்களில் சூர்யா மற்றும் விக்ரம் போலீஸ் கதாபாத்திரத்தில் வந்து அசத்தியுள்ளார். அவர்களது இந்த கதாப்திரங்கள் கோலிவுட்டில் செய்த சிறந்த போலீஸ் கதாப்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இத்தனை புகழுக்கும் பின்னால் செயல்பட்டவர் இயக்குனர் ஹரி. ஹீரோக்களுக்கு போலீஸ் கதாபாத்திரத்தை தன் எழுத்தால் சிறப்பாக செதுக்கும் ஹரி தன் அடுத்த படத்தையும் அதே ஸ்டைலில் தொடரவுள்ளார்.

Advertisement

ஹரியின் அடுத்த படம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் ஹரியின் அடுத்த படத்தை தயாரிக்கின்றனர். ஹீரோவாக புரட்சி நடிகர் விஷால் நடிக்கிறார். ஏற்கனவே தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய மெகா ஹிட் திரைப்படங்களை அளித்த இந்தக் காம்போ மூன்றாவது முறையாக இணைகிறது. செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு வேலைகள் துவங்கவும் இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top