Thursday, April 25, 2024
- Advertisement -
HomeEntertainmentராம் சரண் படத்திற்காக ஷங்கர் வாங்கிய சம்பளம்.. வாயடைத்து போன கோலிவுட்.. இதுக்கு தான் தெலுங்கு...

ராம் சரண் படத்திற்காக ஷங்கர் வாங்கிய சம்பளம்.. வாயடைத்து போன கோலிவுட்.. இதுக்கு தான் தெலுங்கு சினிமா போனாரோ?

பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் தற்போது பிரபல தெலுங்கு ஹீரோ ராம்சரணுடன் கைகோர்த்துள்ளார். இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கு பெயரிட்டிருந்தனர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.
இந்த படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைத்து வருகிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றி உள்ளனர்.

ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் ராம்சரணின் பிறந்தநாளன்று, டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதன்படி இந்த படத்திற்கு கேம் சேஞ்சர் என பெயரிடப்பட்டது.

- Advertisement -

முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படமான கேம் சேஞ்சரில், அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ராம் சரண் தேர்தல் அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குநர் ஷங்கர் பெற்றுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் – 2 படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, ராம் சரண் படத்தை இயக்கிய ஷங்கருக்கு சம்பளமாக ரூ.50 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கரின் சம்பளத்தை கேட்டு கோலிவுட், டோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவும் அதிர்ந்து போயுள்ளது.

- Advertisement -

Most Popular