Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாவிடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்தின் பெயர் என்ன தெரியுமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்தின் பெயர் என்ன தெரியுமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்பொழுது தன்னுடைய 62 ஆவது திரைப்படத்தை நடித்து வருகிறார். விடாமுயற்சி என்ற பெயர் கொண்ட இந்த திரைப்படம் உண்மையிலேயே பல முறை விடா முயற்சி செய்துதான் படப்பிடிப்பை துவங்கியது.

- Advertisement -

நோ பெயின் நோ கெயின் என்ற ஆங்கிலப் பழமொழியை போல இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி வெற்றி வாகை சூடுவதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி முற்றிலும் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இதை இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தின் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜுன் ,நடிகை திரிஷா ,ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், ஆரோவ் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த திரைப்படம் தற்பொழுது அசர் பை ஜானில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. லியோ திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார் நடிகர் அர்ஜுன் .இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கம் பேக் கொடுத்திருந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்திற்கு இணையான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பேரிலேயே ஆக்சன் என்ற பட்டத்தைக் கொண்ட நடிகர் அர்ஜுன் முற்றிலும் ஆக்சன் ஜர்னலில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கிறார் என்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது .

இன்னும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் விதமாக படக்குழுவினர் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள் .இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் “அர்ஜுன்” என்று கூறப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் அஜித் மட்டும் அர்ஜுன் இணைந்து இருக்கிறார்கள் என்பது ரசிகர்களிடத்தில் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

வருகின்ற மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Most Popular