தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய நடிகையாக உருவெடுத்திருக்கிறார் காயடு லோகர். தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகளுக்கான வறட்சி ஏற்பட்டு இருக்கிறது.நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகளுக்கு வயதாகி விட்டதால்,அவர்கள் அதற்கு ஏற்ற ரோலில் தான் நடித்து வருகின்றனர்.
இந்த தருணத்தில் இளம் கனவு கன்னிகளின் வருகைக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். அப்போதுதான் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான டிராகன் படம் மூலம் பிரபலம் அடைந்தார் காயடு லோக்கர். லோகரின் கவர்ச்சிகரமான தோற்றம் அழகு மற்றும் நடனம் என அனைத்தும் தமிழக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இவ்வளவு நாள் இந்த பொண்ணு எங்கே இருந்தது என்று பலரும் கேட்டு வருகின்றனர். டிராகன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு காயடு லோகருக்கு பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. அதில் தற்போது நடிகர் சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தில் தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இது காயடு லோகரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த திரைப்படம் டான் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு பார்க்கிங் என்ற திரைப்படம் மூலம் ராம்குமார் மிகவும் பிரபலம் அடைந்தார்.
கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட ஈகோ பிரச்சனை மையமாக வைத்து உருவான கதையில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ஓடிடியில் பெரும் அளவு வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு வைத்து ராம்குமார் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவராக நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் அதற்கு Tag line டி மோஸ்ட் வான்டட் ஸ்டுடென்ட் என வைக்கப்பட்டு இருக்கிறது.
சிம்பு தற்போது கமல்ஹாசன் உடன் தக் லைப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. டிராகன் திரைப்பட இயக்குனர் அஸ்வின் மாரிமுத்து உடனும் ஒரு திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் பெரிய நடிகர் உடன் தற்போது காயடு இணைந்து இருப்பதால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.