Friday, November 22, 2024
- Advertisement -
HomeEntertainment”கேப்டன் மில்லர்” படத்தால் அச்சத்தில் ரஜினிகாந்த்.. பொங்கல் ரிலீஸில் இருந்து விலகும் லால் சலாம்.. விரைவில்...

”கேப்டன் மில்லர்” படத்தால் அச்சத்தில் ரஜினிகாந்த்.. பொங்கல் ரிலீஸில் இருந்து விலகும் லால் சலாம்.. விரைவில் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டு வரும் 3 முக்கியமான படங்கள் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவேபா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என்று டீசர் ரிலீஸின் போதே அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த படத்தின் டப்பிங் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், திட்டமிட்டபடி படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தங்கலான் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் முதலில் திரையிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதனால் தங்கலான் படம் திட்டமிட்டபடி ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகாது என்று கூறப்படுகிறது.

அதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேப்டன் மில்லர், அயலான், அரண்மனை 4, லால் சலாம் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களில் விளம்பர பணிகள் அடுத்தடுத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. ஆனால் லால் சலாம் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பணிகள் முடிவடைந்தாலும், ஏராளமான படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதால் எதிர்பார்த்த அளவிற்கான திரையரங்குகள் கிடைக்குமா என்பதால், படக்குழு பின் வாங்கியுள்ளது.

- Advertisement -

இதேபோல் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படமும் தள்ளி போகிறது. இதுவரை படப்பிடிப்பே நிறைவடையாத சூழலில், இதன்பின் டப்பிங், விஎஃப்எக்ஸ், கிராஃபிக்ஸ் பணிகள் நடக்க வேண்டுமென்றால் ஜூன் மாதத்திற்கு பின் ரிலீஸாகும் என்று கருதப்படுகிறது. ஞானவேல்ராஜா தயாரிக்கும் 2 படங்களும் தள்ளி போவதற்கு அமீர் விவகாரமும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Most Popular