Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஇது லிஸ்ட்லயே இல்லையே.. சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான்.. சுதா கொங்கரா செய்யப் போகும் சம்பவம்!

இது லிஸ்ட்லயே இல்லையே.. சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான்.. சுதா கொங்கரா செய்யப் போகும் சம்பவம்!

சூரரைப் போற்று, ஜெய் பீன் உள்ளிட்ட படங்கள் மூலம் இந்திய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்திற்கு பின் எப்படி அடுத்தடுத்த படங்களில் வெரைட்டி காட்ட தொடங்கினாரோ, இப்போது மீண்டும் அதே போல் படங்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளார் சூர்யா. இதனால் வணங்கான் படத்தில் இருந்து கூட பாதியுடன் விலகினார்.

- Advertisement -

இதன்பின் அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்தார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் மற்றும் தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் இணைந்து கங்குவா படத்தை தயாரித்து வருகிறது. இதில் திஷா படானி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளும் வெளியாகின. அதில் வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யாவின் அசத்தல் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Suriya 42

10 மொழிகளில் டப் செய்யப்பட்டு கங்குவா வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போல் கங்குவா திரைப்படம் இந்தியளவில் பெரும் வசூலை வாரிக் குவிக்கும் என்று தயாரிப்பாளர்கள் அடித்து கூறி வருகின்றனர். இதனால் கோலிவுட் அதிர்ந்து போயுள்ளது.

- Advertisement -

இந்த படத்திற்கு பின் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க பணிகளையும் சுதா கொங்கரா வேகமாக செய்து வருகிறார். வழக்கம் போல் இந்தப் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசைமைக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் சூர்யாவை போலவே வெரைட்டி காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வரும் துல்கர், சூர்யாவுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுதா கொங்கரா படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கூற தொடங்கியுள்ளனர்.

Most Popular