Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஒரே நேரத்தில் மாமனார், மருமகன் படங்களில் பிஸியான பிரபல நடிகை… பா ரஞ்சித் பட கதாநாயகிக்கு...

ஒரே நேரத்தில் மாமனார், மருமகன் படங்களில் பிஸியான பிரபல நடிகை… பா ரஞ்சித் பட கதாநாயகிக்கு திரைத் துறையில் சிவப்பு கம்பள வரவேற்பு

ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மொய்தின் கான் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க, வரும் பொங்கலன்று லால் சலாம் வெளியாகிறது.

- Advertisement -

இந்தப் படத்திற்குப் பிறகு, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் ஒரு படம் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த். இதில் ஞானவேல் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. போலி என்கவுண்டர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும், இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் படப்பிடிப்பு வரும் வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த படத்தை எடுக்க ஞானவேல் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக குமரி வட்டார வழக்கு மொழியில் ரஜினிகாந்த் பேச இருக்கிறாராம். இந்த படத்தின் அப்டேட்களை நேற்று முதல் லைக்கா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டிருக்கும் லைக்கா நிறுவனம், ரித்திகா சிங், மஞ்சுவாரியர் ஆகியோர் படத்தில் இருப்பதை உறுதி செய்தது. இதில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாராம். யாருமே எதிர்பாக்காத வகையில், துஷாரா விஜயன் படத்தில் இருப்பதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு படத்தில் முக்கிய ரோல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்த துஷாரா, தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவனிக்க வைத்திருப்பார். இது தொடர்ந்து நட்சத்திரம் நகரிக்கிறது திரைப்படத்திலும் அவர் நடித்தார். தற்போது தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா நடித்த வருகிறார். அவர் தனுஷின் தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் ரஜினி படத்திலும் இணைந்திருப்பதால், துஷாரா விஜயன் பிசியாக இருக்கிறார். ஒரே சமயத்தில் அவர் மாமனார் மற்றும் மருமகன் திரைப்படங்களில் நடித்து வருவதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Most Popular