Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentதனது வாத்தியாருடன் மோதும் வாத்தி.. தனுஷ் vs செல்வராகவன்.. யாருக்கு வெற்றி?

தனது வாத்தியாருடன் மோதும் வாத்தி.. தனுஷ் vs செல்வராகவன்.. யாருக்கு வெற்றி?

காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன் தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். கிட்டத்தட்ட ஒரு ஹீரோவுக்கு இணையான மாஸ் கொண்ட இயக்குநர் எனும் பெயரைப் பெற்ற செல்வராகவன் சமீபகாலமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சாணி காகிதம், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றிய அவர் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் , பகாசூரன் என்னும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே திரௌபதி, ருத்ர தாண்டவம் திரைப்படங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய மோகன் ஜி-இன் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தின் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அதே நாளில் தனுஷின் வாத்தி திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. திருச்சிற்றம்பலம் மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய இரண்டு வெற்றி திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்னும் பெயரில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருந்த நிலையில் நாளை வாத்தி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகிறது. இப்படி ஒரே நாளில் பகாசூரன் மற்றும் வாத்தி திரைப்படங்கள் வெளியாக, நாயகர்களாக அண்ணன்- தம்பி இருவரும் ஒரே நேரத்தில் மோதிக் கொள்வது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனுசை நாயகனாக அறிமுகப்படுத்திய செல்வராகவனே தனுஷ் படத்துடன் நாயகனாக மோதிக் கொள்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Most Popular