Thursday, November 21, 2024
- Advertisement -
HomeEntertainmentகேரளா தளபதியோட கோட்டை.. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுனாமி போல் குவிந்த விஜய் ரசிகர்கள்!

கேரளா தளபதியோட கோட்டை.. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுனாமி போல் குவிந்த விஜய் ரசிகர்கள்!

லியோ படத்திற்கு பின் நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் மட்டுமல்லாமல் மீனாட்சி செளத்ரி, ஸ்னேகா, லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மற்றும் மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். வில்லனாக மைக் மோகன் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். டைம் டிராவல் தொடர்புடைய படம் என்பதால், நிகழ் காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு சென்று விஜயை அழைத்து வருவது போலவும், இருவரும் இணைந்து வில்லனை முடித்து கட்டுவது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத், ஜெர்மனி, இலங்கை, பிரான்ஸ் என்று பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. தற்போது சிறு வயது விஜய்-ன் காட்சிகளை இயக்குநர் வெங்கட்பிரபு படமாக்கி வருகிறார். இதற்காக மீசையை எடுத்து வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் விஜய், அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் GOAT படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிகராக கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை விஜய் படம் ரிலீஸாகும் போதும், கேரளாவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். இந்த சூழலில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வருவதை அறிந்து ரசிகர்கள் சுனாமி போல் குவிந்துவிட்டனர்.

- Advertisement -

சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்  கேரளா சென்ற விஜயை கேரளா ரசிககள் பார்த்ததும் ஆர்ப்பரித்து கொண்டாடினர். இதனை நடிகர் விஜய் காரில் ஏற, அந்த கார் எறும்பு போல் ஊர்ந்து ரசிகர்களின் கூட்டத்திற்குள் சென்றது. கடந்த சில நாட்களாக ரியல் லொகேஷனில் நடித்து வரும் விஜய், ரசிகர்களின் அன்பை பார்த்து நெகிழ்ந்து போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Most Popular