Entertainment

ஒரே ஒரு போஸ்ட்… இதுதான் காதல் மொழியோ..!  தமன்னா – விஜய் வர்மா காதலை உறுதிசெய்த ரசிகர்கள்!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் தமன்னா தற்போது ஜெயிலர் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 30 வயதை கடந்தாலும், தமன்னா இதுவரை தனது திருமணம் ஆசை குறித்து பொது வெளியில் பேசியதே இல்லை. எப்போது நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும், உடனடியாக விளக்கம் கொடுத்து சர்ச்சைகளை நிறுத்துவார்.

இந்த நிலையில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்  பாலிவுட் நடிகர் விஜய் வர்மா மற்றும் தமன்னா இருவரும் முத்தங்களை பகிர்ந்துக் கொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதன் மூலம் நடிகை தமன்னா – விஜய் வர்மா இருவரும் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப பல்வேறு விருது நிகழ்ச்சிகளில் விஜய் வர்மா – தமன்னா ஜோடி ஒன்றாக கலந்துகொண்டது. இதனால் அவர்கள் மீதான கவனமும் அதிகரித்தது.

அதேபோல் இவர்கள் இருவரும் பல்வேறு பார்ட்டிகளில் இணைந்து தென்பட்டனர். ஆனால் இதுகுறித்த கேள்விக்கு, இருவரும் நண்பர்கள் என்றே பதில் அளித்தனர்.  விஜய் வர்மா இந்தியில் பிங்க், பாகி 3, டார்லிங்க்ஸ் உள்பட பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராகவும் உயர்ந்துள்ளார்.  இந்த நிலையில் காதலர் தினத்தையொட்டி, விஜய் வர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இரண்டு கால்களும் இடையில் லவ் எமோஜியும் காணப்படுகிறது.

இந்தப் போஸ்ட்டை அவர் வெளியிட்டவுடன் அந்த மற்றொரு கால்கள் தமன்னாவுடையது என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த உடை மற்றும் ஷுக்களுடன் தமன்னா போஸ்ட் செய்த மற்றொரு பதிவையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனால், விஜய் வர்மா, காதலர் தினத்தில் தமன்னாவுடனான காதலை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமன்னாவும் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top