Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentஇந்தியன் 2 இன்ட்ரோ.. எல்லாரையும் காட்டிட்டாங்க.. கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால் எங்கடா?

இந்தியன் 2 இன்ட்ரோ.. எல்லாரையும் காட்டிட்டாங்க.. கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால் எங்கடா?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வெளியாகியுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் மட்டுமல்லாமல் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த இன்ட்ரோ 1996ஆம் ஆண்டில் இந்தியன் தாத்தாவான கமல்ஹாசன் அமெரிக்காவில் தப்பி செல்வதை காட்டிவிட்டு, மீண்டும் வருவேன் என்று கூறுவதில் தொடங்குகிறது. அதன்பின் நேராக 2023ஆம் ஆண்டில் மக்கள் லஞ்சம், ஊழலால் அதிக பாதிக்கப்படுவதை போன்ற காட்சிகள் காட்டப்படுகிறது.

அதேபோல் பாதுகாப்பு அதிகாரியாக பாபி சிம்ஹா, ஊழல்வாதியாக சித்தார்த், ரிப்போர்ட்டராக ரகுல் ப்ரீத் சிங், பொதுமக்களில் ஒருவராக பிரியா பவானி ஷங்கர், வில்லனாக எஸ்ஜே சூர்யா என்று கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியில் கமல்ஹாசன் மோசமான இந்தியன் தாத்தா கெட்டப்பில் வந்து இந்தியன் இஸ் பேக் என்று சொல்வதுடன் இந்தியன் 2 என்று தலைப்பு வருகிறது.

- Advertisement -

இதனிடையே கொரோனாவின் போது பைத்தியக்காரதனாக தட்டுகளை அடித்து கொண்டிருந்த காட்சிகள், தீபம் ஏற்றிய காட்சிகளும் நெகிழ்ச்சியாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காட்சிகள் பழையதாக இருந்தாலும், ஷங்கரின் பிரம்மாண்டம் திரையில் வெளிப்படையாகவே தெரிகிறது. இதலா இந்தியன் 2 இன்ட்ரோ ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதனிடையே இந்தியன் 2 இன்ட்ரோவில் காஜல் அகர்வால் தொடர்புடைய காட்சிகள் இடம்பெறவில்லை. இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால், முதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஏன் அவரின் கதாபாத்திரம் மட்டும் வரவில்லை என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Most Popular