Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஷாலின் 34வது படம்.. கவுதம் மேனனுடன் கைகோர்த்த புரட்சி தளபதி.. இனிதான் ட்விஸ்ட் காத்திருக்கு

விஷாலின் 34வது படம்.. கவுதம் மேனனுடன் கைகோர்த்த புரட்சி தளபதி.. இனிதான் ட்விஸ்ட் காத்திருக்கு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் விஷாலுக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது இந்தப் படம். டைம் டிராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கேங்ஸ்டர் காமெடி படம் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

இந்த படத்திற்கு பின் நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் கைகோர்த்துள்ளார். ஏற்கனவே விஷால் – ஹரி கூட்டணி இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. விஷாலுக்கு குடும்ப ரசிகர்களை கொஞ்சம் கொண்டு வந்த படமாகவும் இரு படங்களும் அமைந்தன.

அதேபோல் சூர்யாவால் கழற்றிவிடப்பட்ட ஹரி, அருண் விஜயை வைத்து இயக்கிய யானை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் விஷால் படத்தின் மூலம் பெரிய வெற்றியை பெறுவதற்காக ஹரியும் தீவிரமாக இருக்கிறார். இந்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

- Advertisement -

அதேபோல் விஷால் ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அண்மையில் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

ஏற்கனவே யோகி பாபு காமெடியனாக நடித்து இருக்கிறார். இதனால் விஷாலின் 34வது படத்தில் அதிகளவிலான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஷால் டாக்டராக நடித்து வருகிறார். வழக்கம் போல் ஹரியின் ஸ்டைலில் இன்னொரு குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Popular