இயக்குநர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான பருத்துவீரன் பஞ்சாயத்து 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அண்மையில் ஞானவேல்ராஜா கொடுத்த நேர்காணல் ஒன்றில், இயக்குநர் அமீரை திருடன், பொய் கணக்கு எழுதுபவர், பன்றிக்கு பொய் கணக்கு காட்டினர், நீண்ட நாட்கள் ஷூட்டிங் எடுத்தார், பருத்திவீரன் படத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று வன்மத்தை கக்கினார்.
இதனால் கொந்தளித்த அமீர், இந்த விவகாரத்தை பற்றி அறிந்தவர்கள் அமைதியாக இருப்பதற்கு காரணம் புரியவில்லை என்று கூறினார். இதையடுத்து இயக்குநர் சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, கரு.பழனியப்பன், பாரதிராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட பலரும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக காட்டமாக அறிக்கை மற்றும் பதவியை வெளியிட்டனர்.
அதேபோல் சசிகுமார், பருத்திவீரன் படத்திற்காக நானும் பணம் கொடுத்துள்ளேன் என்று வெளிப்படையாகவே கூறினார். இதையடுத்து அமீர் பேசியதில் உண்மை இருந்ததால், சோசியல் மீடியால் ஞானவேல்ராஜா மட்டுமல்லாமல் சூர்யாவின் குடும்பத்தினர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. இதன்பின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அமீர் பற்றி பேசிய வார்த்தைகள் மனதை கஷ்டப்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
இதற்கு நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி தரமான பதிலடி கொடுத்துள்ளார். சமுத்திரகனி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதர்.. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது.. எந்த பொதுவெளியில் எகத்தாளமாக உட்கார்ந்து கொண்டு அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைச்சீங்களோ.. அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் கொடுத்த கேவலமான தரங்கெட்ட இண்டர்வியூவை அகற்ற வெண்டும்.
அன்று கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு போன பணத்தை ஒத்த பைசா மிச்சமில்லாமல் திருப்பி கொடுக்க வேண்டும். ஏனென்றால் கடனாக வாங்கின நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம், பருத்திவீரன் படத்தில் வேலை பார்த்த பலருக்கும் இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்.. அவங்களெல்லாம்.. எளிய குடும்பத்தில் இருந்து வேலை பார்த்தவர்கள்.. நீங்கதான்.. அம்பானி பேமிலியாச்சே…! என்று தெரிவித்துள்ளார்.