Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாகோட் திரைப்படம் இந்த ஓ டி டி இல் தான் வெளியிடப்பட இருக்கிறதா..? எத்தனை...

கோட் திரைப்படம் இந்த ஓ டி டி இல் தான் வெளியிடப்பட இருக்கிறதா..? எத்தனை கோடிக்கா இருக்கும்..?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தன்னுடைய 68வது திரைப்படத்தை சிறப்பாக நடித்து வருகிறார்.

- Advertisement -

தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. தளபதி விஜய் உடன் பிரபுதேவா ,பிரசாந்த், அஜ்மல், சினேகா ,மீனாட்சி சவுத்ரி, லைலா, ஜெயராம் என்று பல பிரபலங்கள் திரைப்படத்தில் ஒன்று கூடி நடித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் உடன் பிரபுதேவா ,பிரசாந்த், அஜ்மல் இணைந்து இருப்பது போன்ற திரைப்படத்தின் உடைய செகண்ட்ஸ் போஸ்ட் வெளியானது ரசிகர்களை  பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

இதனால் இந்த திரைப்படத்தின் மீது நம்பிக்கையும் அதிகமாகி இருக்கிறது பொதுவாக ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படம் வெளிவந்தால் அதனுடைய வெற்றியை பொறுத்து ஓடி டியில் அத்திரைப்படத்தை வாங்கிக் கொள்வார்கள்.

- Advertisement -

ஆனால் ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரபல நடிகர்கள் சிறந்த இயக்குனர்கள் கூட்டணியில் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது என்றாலே அந்த திரைப்படத்தை முந்திக்கொண்டு ஓ டி டி தளங்கள் பெற்றுக் கொள்ளும் .

அந்த வகையில் தற்பொழுது கோட் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் என்ற ஒடிடி தளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவலாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தளபதி விஜய் திரைப்படங்களுக்கு ஓ டி டி இல் நல்ல மவுஸ் இருக்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் 120 கோடி கொடுத்து வாங்கி இருந்தார்கள் .அதைத்தொடர்ந்து கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படத்தை 160 கோடி கொடுத்து நெட்லிக்ஸ் வாங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல் இந்த திரைப்படத்தையும் நெட்லிக்ஸ் வாங்கி விடுமோ என்ற சந்தேகம் பலர் மத்தியில் இருந்து வந்தது ஆனால் அமேசான் பிரைம் முந்திக் கொண்டதாக தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

இதுபோன்ற விஜய் திரைப்படங்களை ஓடி டியில் வாங்குவதற்கு காரணம் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு ,ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.

அதனால் ஓ டி டி இ இவருடைய திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தான் ஓடிடி நிறுவனங்களும் விஜய் திரைப்படத்தை வாங்க முன் வருகிறார்கள்.

Most Popular