Thursday, April 18, 2024
- Advertisement -
HomeEntertainmentகோல்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

கோல்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் பிரித்திவிராஜ் சுகுமாரன். இவர் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து மொழி, பாரிஜாதம், சத்தம் போடாதே, அன்வர் ராவணன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கொண்டவர்.

சில ஆண்டுகளாக நடிகர் பிரிதிவிராஜ் மலையாள திரைப்படங்களிலேயே அதிகமான கவனம் செலுத்தி வந்திருந்தார்.
இவரின் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெருமளவு வரவேற்பை பெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தற்பொழுது கோல்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் என்று பல மொழிகளிலும் பெருமளவில் வரவேற்பை பெற்றதோடு ரசிகர்களிடம் ஒரு தனி இடம் பிடித்தது இந்த காதல் கதை.

- Advertisement -

பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் தற்பொழுது பிரித்விராஜ் நடித்த கோல்ட் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். அதனால் நிச்சயம் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரை படத்திற்கு பிரேமம் நேரம் போன்ற திரைப்படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் தான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

திரைப்படத்தின் கூடுதல் சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் தரக்கூடிய வண்ணம் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா தான் நடித்திருக்கிறார். நடிகை நயன்தாரா திருமணத்திற்குப் பிறகு முதலில் நடித்திருக்க கூடிய படமாக இந்த கோல்ட் திரைப்படம் அமைந்திருக்கிறது.

இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள இந்த கோல்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தேதியை பட குழு நாளை மதியம் 1:12 மணிக்கு அறிவிக்க உள்ளது. ஏற்கனவே இந்த படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சில பணிகள் காரணமாக தள்ளிப் போனது.இதனால் நாளை படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தேதி உறுதியாக அறிவிக்கப்படும்.தமிழ், மலையாளம் ,தெலுங்கு என்ற பல மொழிகளிலும் கோல்ட் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Most Popular