Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentதனுஷ்-க்கு கதை ஒன்னு சொல்லிருக்கேன்.. சதுரங்க வேட்டை ஸ்டைல்ல இருக்கும்.. விரைவில் அறிவிப்பு வரும்.. அ.வினோத்...

தனுஷ்-க்கு கதை ஒன்னு சொல்லிருக்கேன்.. சதுரங்க வேட்டை ஸ்டைல்ல இருக்கும்.. விரைவில் அறிவிப்பு வரும்.. அ.வினோத் கொடுத்த அப்டேட்..!

கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் அ.வினோத். இந்தப் படம் பொதுமக்களை ஏமாற்ற எப்படியெல்லாம் திட்டமிடப்படுகிறது என்பதை மையமாக கொண்டு வெளியானது. பொதுமக்களை ஏமாற்ற முதலில் அவர்களின் ஆசையை தூண்ட வேண்டும் என்ற அடிப்படையையும் இந்தப் படம் சுட்டிக் காட்டியது. நட்ராஜ் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.

தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தையும் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கினார் அ.வினோத்.
இதையடுத்து அஜித்தை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களில் இயக்கும் வாய்ப்பு அ.வினோத்திற்கு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என அடுத்தடுத்த படங்களை பிரபல தயாரிப்பாளர் போனிக்கபூர் தயாரிப்பில் இயக்கினார். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சூப்பர் ஹிட்டடித்தன.

- Advertisement -

சமீபத்தில் வெளியான துணிவு படம் அஜித் கேரியரில் சிறப்பாக அமைந்துள்ளது. இதையடுத்து கமல்ஹாசன், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரில் ஒருவரை அ.வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனுக்காக தான் ஒரு ஸ்கிரிப்டை தயாரித்துள்ளதாக அவர் கூறிய நிலையில், இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் தற்போது அ.வினோத் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்தின் அறிவிப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்ததாக அ.வினோத் இயக்கத்திலும் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும இணைவார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இதனிடையே தன்னுடைய மற்றொரு நேர்காணலில் பேசிய அ.வினோத்திடம் சதுரங்க வேட்டை போன்ற படத்தை அவர் மீண்டும் இயக்குவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அ.வினோத், சதுரங்க வேட்டை போன்ற அதே கதையை தான் நடிகர் தனுஷிடம் கூறியதாகவும் இதுகுறித்து விரைவில் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதனிடையே தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் தன்னுடைய இயக்கத்தில் டி50 படத்தில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Most Popular