Tuesday, December 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஉருவாகிறது தீரன் அதிகாரம் 2ஆம் பாகம்.. மீண்டும் கார்த்தியுடன் இணையும் அ.வினோத்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

உருவாகிறது தீரன் அதிகாரம் 2ஆம் பாகம்.. மீண்டும் கார்த்தியுடன் இணையும் அ.வினோத்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

நடிகர் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமென்றால் அது தீரன் அதிகாரம் ஒன்று தான். அதற்கு முன் சிறுத்தை படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அது கமர்ஷியல் சாயலில் அமைந்தது. ஆனால் அ.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நிஜத்திற்கு அருகில் இருந்தது.

- Advertisement -

நெடுஞ்சாலைகளில அமைந்துள்ள வீடுகளில் கொள்ளையடிக்கும் பழக்கம் கொண்ட வடநாட்டு கொள்ளையர்களை தேடி அலைந்து, முகாமிட்டு பிடித்து வரும் த்ரில்லர் படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தின் இடைவேளை காட்சி இந்திய சினிமாவை ஒரு உலுக்கு உலுக்கியது என்றே சொல்லலாம்.

அந்த படத்தில் நாயகியின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் அது கார்த்தியின் வேண்டுகோளுக்காக இணைக்கப்பட்ட காட்சிகளாக அமைந்தது. இந்த நிலையில் தீரன் அதிகாரம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் கார்த்தியே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

தற்போது கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை அ.வினோத் இயக்கவுள்ளார். அந்த படத்திற்கு பின் தீரன் இரண்டாம் பாகத்தின் பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆரம்ப கதையை அ.வினோத் எழுதிய நிலையில், அதனை கார்த்தியிடம் கூறி திரைக்கதை அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளார்.

- Advertisement -

இதனால் கைதி – 2 படத்தின் வெளியீட்டிற்கு பின் தீரம் அதிகாரம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. முதல் படத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், அந்த கதாபாத்திரங்களை வைத்து வேறு சில வழக்குகளின் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Most Popular