Friday, April 19, 2024
- Advertisement -
HomeEntertainmentதாமிரபரணி, பூஜை.. மீண்டும் இணையும் ஹரி - விஷால் கூட்டணி? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தாமிரபரணி, பூஜை.. மீண்டும் இணையும் ஹரி – விஷால் கூட்டணி? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரசாந்த் நடிப்பில் உருவான தமிழ் திரைப்படம் மூலம் இயக்குனராக, அறிமுகமானவர் ஹரி. தொடர்ந்து சாமி, கோவில், ஐயா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். இதில் விஷால் – ஹரி கூட்டணியில் உருவான தாமிரபரணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பானு, பிரபு, நதியா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் விஷாலுக்கு நல்ல ஓபனிங் கொடுத்த படமாக இந்த படம் அமைந்தது.

- Advertisement -

2007ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது. இதன் பின்னர் 7 வருடங்களுக்குப் பிறகு, ஹரி – விஷால் கூட்டணி பூஜை திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்தது. 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் மீண்டும் குடும்பங்களை திரையரங்கு நோக்கி படையெடுக்க செய்தது. நடிகர் விஷாலின் வெற்றி திரைப்பட வரிசையில் இவ்விரு திரைப்படங்களும் முக்கிய இடத்தில் உள்ளன. பூஜை திரைப்படத்திற்கு பிறகு விஷாலுடன் ஹரி இணையாமல் இருந்தார்.

இந்த நிலையில், சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் தங்கவேல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்து ஹரி படத்தில் விஷால் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தாமிரபரணி, பூஜை திரைப்படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தது போல, இந்த திரைப்படத்திற்கும் அவர், இசையமைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ‘யானை’ படத்திற்கு பிறகு விஷால், ஹரி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Most Popular