Entertainment

பாபா புதிய கிளைமாக்ஸ் என்ன தெரியுமா? செம டச்சிங்

2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் அந்த ஆண்டு அதிக வசூலை பெற்ற தமிழ் திரைப்படம் இன்று பெருமையை பெற்றது. எனினும் முந்தைய ரஜினி படங்களை விட குறைவான வசூலை அடைந்ததால் அதிக விலைக்கு வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் நஷ்டத்தை கொடுத்தது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாபா திரைப்படத்தை நடிகர் ரஜினி ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்.

Advertisement

இதில் சில காட்சிகளை ரஜினி மாற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதில் பாபா திரைப்படத்தில் இமயமலைக்கு செல்லாமல் தனது பூலோக வாழ்க்கையில் தங்குவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டன. இது ரஜினியின் அப்போதைய அரசியல் சூழலுக்கு தகுந்த மாதிரி இந்த காட்சிகள் இருந்தது.ஆனால் தற்போது ரஜினி அரசியலுக்கு வருவது இல்லை என்று கூறிவிட்டதால், இந்த கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது பாபா ரிலீசில் அந்த கிளைமாக்ஸ் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. புதிய கிளைமாக்ஸ் படி இமயமலையில் பாபாஜி இடம் ரஜினி தான் இங்கே உங்கள் சிஷ்யனாக தங்கி விடுகிறேன் என்று கூறுகிறார். அதற்கு பதில் அளிக்கும் பாபாஜி நீ நான் வைத்த பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிட்டாய். எனினும் உனது தாயை நீ சரியாக கவனிக்கவில்லை. உன்னால் உன் தாய்க்கு எந்த மகிழ்வும் கிடையாது. எந்த ஜீவராசியாக இருந்தாலும் தனது தாயை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே நீ அடுத்த ஜென்மத்தில் பிறந்து தாயை சரியாக பார்த்துக் கொண்டால் மட்டுமே தமது சிஷ்யனாக வர வாய்ப்பு இருப்பதாக பாபாஜி கூறுவது போல் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாபா திரைப்படத்தில் ரஜினி தன் தாய்க்கு மரியாதை கொடுப்பார். ஆனால் தாயின் கனவை அவர் நிறைவேற்ற தவறவிடுவார். தற்போது இந்த புதிய கிளைமேக்ஸ் மூலம் படம் செம செண்டிமெண்ட் ஆக இருக்கிறது என ரசிகர்கள் கண்ணீர் விடுகின்றனர். ரஜினி 72 வது பிறந்தநாள் கொண்டாடுவதால் பல்வேறு திரையரங்குகளில் பாபா திரைப்படம் சிறப்பு காட்சிகள் இன்று திரையிடப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top