Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாவிக்ரம் கமல் போல அவதாரம் எடுக்கும் ஹிப்ஹாப் தமிழா.. ! யாருக்கும் தெரியாமல் முதல் ஷூட்டிங்கை...

விக்ரம் கமல் போல அவதாரம் எடுக்கும் ஹிப்ஹாப் தமிழா.. ! யாருக்கும் தெரியாமல் முதல் ஷூட்டிங்கை நிறைவும் செய்த படக்குழு.. !

இசையமைப்பாளராக களம் பதித்து பின்னர் நடிகராக எழுத்தாளராக இயக்குனராக மற்றும் தயாரிப்பாளராகவும் முன்னேறியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. மீசையமுறுக்கு திரைப்படத்திற்கு கிடைத்த அபார வெற்றிக்குப் பின் தொடர்ந்து அடுத்தடுத்து நட்பே துணை, நான் சீர்த்தால், சிவகுமாரின் சபதம் என பல படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

- Advertisement -

மீசையமுறுக்கு திரைப்படத்தைப் போலவே சிவகுமாரின் சபதத்திலும் தயாரிப்பது, இயக்குவது, நடிப்பது, இசையமைப்பது என அனைத்து துறையிலும் பணிபுரிந்தார். ஆனால் தன் முதல் படத்தைப் போல இந்தப் படம் ஜொலிக்கவில்லை. அண்மையில் ஏ.ஆர்.கே சரவன் இயக்கத்தில் வெளியான வீரன் படமும் பெரிதாக சோபிக்கவில்லை.

ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்தத் திரைப்படம்

வீரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஹிப்ஹாப் தமிழா அவரது அடுத்தப் படத்தை துவங்கிவிட்டார். ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வரவில்லை. சமூக வலைதளங்களிலும் இந்தச் செய்து பெரிதளவில் போய் சேரவில்லை அதனால் பலருக்கு இந்தப் படம் குறித்து தெரியவில்லை.

- Advertisement -

மூன்றாவது முறையாக தானே எழுதி, இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடிக்கிறார் ஆதி. இந்தப் படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்ப மிகவும் எண்ணுகிறார். அதனாலேயே அறிவிப்பு இல்லாமல் அனைத்து பணிகளையும் சிறப்பாகச் செய்து முடித்துக் கொண்டிருக்கிறார் போல.

- Advertisement -

நட்பே துனைக்குப் பின் இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் 2வது முறையாக அனாஹா ஜோடி சேர்கிறார். மேலும் நாசர் மற்றும் நடராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காமெடி, குடும்பக் கதை என்றில்லாமல் இம்முறை ஹிப்ஹாப் தமிழா புதிய அவதாரத்தில் முயற்சிக்கிறார்.

இந்தப் படத்தில் ஆதி பிளாக் ஸ்குவாட் ஏஜென்ட்டாக வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் வகையில் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தின் தலைப்பு ‘ வார் ’ எனச் கூறுகின்றனர். எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அதற்குள் படத்தின் முதல் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டார் ஆதி. முதல் அட்டவணை சென்னையில் நடைபெற்றது.

அடுத்து படக்குழு உடனவே அடுத்த பணியையும் தொடர்வுள்ளது. கமலைப் போல எழுதி இயக்குவதோடு அவரைப் போலவே ஏஜென்ட் திரில்லர் படத்தையும் செய்கிறார். கமலின் 1987 விக்ரம் போல வீணாகாமல் இருந்தால் சரி தான் !

Most Popular