சினிமா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் திருப்பம்..! விக்ரமை அறைந்த இனியா

சன் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இனியா தொடரில் தற்பொழுது ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகிய டீலா நோ டீலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரிஷி, விக்ரம் என்ற பெயரில் இந்த நாடகத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ஆலியா மானசா இனியா என்ற பெயரில் இந்தத் தொடரில் கதாநாயகி நடித்து வருகிறார்.
ஆரம்ப காலத்தில் பெண்களை அடிமையாக நினைத்து ஒரு ஆண் ஆதிக்க வாதியாக இருந்தவர் விக்ரம்,  தற்பொழுது இனியாவை கண்ட பிறகு அவரோடு பழக ஆரம்பித்த பிறகு முழுவதுமாக மாறி இனியாவே அளவுக்கு அதிகமாக காதலித்து தற்பொழுது திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் விக்ரமுடைய தந்தை இவரை விட பெரிய ஆணாதிக்கவாதி என்பதால் தன் வீட்டிற்கு வரும் மருமகள் சொத்தை எழுதி கேட்டு கொடுமை செய்து வருகிறார். அதன் காரணமாகத்தான் தன்னுடைய மகன் விக்ரம் தன்னைப் போன்ற ஒரு மனநிலையில் இருப்பவர் என்று எண்ணி இனியாவை திருமணம் செய்ய சம்மதம் கூறினார்.

Advertisement

ஆணாதிக்கவாதியாக இருக்கும் பொழுது இனியாவை பழிவாங்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் விக்ரம் இருந்தார். அதன் பிறகு அவர் மீது காதல் வையப்பட்டு விக்ரமிற்கு பலது எதுவும் ஞாபகம் இல்லை அதை மறந்து அவர் இனியாவை மிகுதியாக நேசித்து வருகிறார். இந்த சமயத்தில் திருமணமும் முடிந்து விட்டது. ஆனால் தற்பொழுத விக்ரம் உண்மையில் மாறவில்லை அவர் அவர் ஆரம்ப காலத்தில் எப்படி எல்லாம் தங்கையை தாயை கொடுமைப்படுத்தினார். உன்னையும் அவர் பழிவாங்கத்தான் திருமணம் செய்து இருக்கிறார் என்று உண்மைகளை எல்லாம் விக்ரமின் தந்தை இனியாவிடம் போட்டு உடைத்து விடுகிறார்.

இதைக் கேட்ட இனியா மிகுந்த அதிர்ச்சியில் விக்ரமைப் அறைந்து விட்டாள்.அன்பான ரசிகர்கள் இது கனவாக இருக்கும் என்று கூறுகிறார்கள் .இது கனவாக இருந்தால் தான் இந்த சீரியல் நன்றாக இருக்கும். உண்மை அறிந்து விக்ரமும் இனியாவும் பிரிந்து விட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்று பல ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இவர்களுடைய காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது உண்மையா இல்லை கனவா என்பது இன்றே எபிசோடு தெரிய வரும் அதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top