Saturday, September 14, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் அண்ணா அந்த வார்த்தை கூறியதற்கு நானே பொறுப்பு… குறுக்கே விழுந்து அம்புகளை வாங்கிக் கொண்ட...

விஜய் அண்ணா அந்த வார்த்தை கூறியதற்கு நானே பொறுப்பு… குறுக்கே விழுந்து அம்புகளை வாங்கிக் கொண்ட லோகேஷ் கனகராஜ்…

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி இணைந்துள்ள இந்த திரைப்படத்தில், திரிஷா சஞ்சய் தத் அர்ஜுன் மிஷ்கின் கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர்.

- Advertisement -

படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது. இதில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நான் ரெடி தான் பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை லியோவில் இருந்து மூன்றாம் பாடல் வெளியாகிறது. இது மெலடி சாங்காக முணுமுணுக்கும் ரகத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தம் அடைய, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக லியோவில் இருந்து இரண்டாம் பாடலை உடனடியாக படக்குழு வெளியிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

- Advertisement -

காஷ்மீரில் குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வரும் விஜய், தொடர்ந்து வில்லன் கும்பல் சீண்டுவதும், அவர்களிடமிருந்து தப்பிக்க விஜய் ஓடுவதுமாக காட்சிகள் இடம்பெற்றன. பார்த்தியாக வாழும் விஜய்யை, லியோ தான் என்று ஒரு கும்பல் அடித்து துரத்த, தான் அவன் இல்லை என்பதை கெட்ட வார்த்தையுடன் ஆக்ரோஷமாக கூறியிருப்பார் விஜய். குடும்பங்கள் குழந்தைகள் ஒரு சேர பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு உச்ச நட்சத்திரம், இப்படி பேசலாமா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் இதற்கு பதிலளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இது குறித்து அவர் கூறியதாவது, டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போல காட்சி இருக்கும். ஆறு நிமிடங்கள் சிங்கிள் ஷாட் ஆக எடுக்கப்பட்ட அந்த காட்சியின் நடுவில் அந்த வார்த்தை வரும். அந்த கதாபாத்திரத்திற்கு அந்த வார்த்தை தேவைப்பட்டதால் நான் தான் விஜய் அண்ணாவை கட்டாயப்படுத்தினேன். இதனால் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Most Popular