Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentநானும், அஜித் குமாரும் ”வில்லு” படத்தை இணைந்து பார்த்தோம்.. எங்கு தெரியுமா? அமர்க்களம் இயக்குநர் சீக்ரெட்!

நானும், அஜித் குமாரும் ”வில்லு” படத்தை இணைந்து பார்த்தோம்.. எங்கு தெரியுமா? அமர்க்களம் இயக்குநர் சீக்ரெட்!

தமிழ் சினிமாவில் ரஜினி – கமலுக்கு பின் அடுத்த தலைமுறை நடிகர்கள் என்றால் அஜித் குமார் – விஜய் தான். இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவுக்கு வந்து, ஒரே நேரத்தில் உச்சத்திற்கு வந்தவர்கள். காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட், மாஸ் ஹீரோ என்று ஒரே மாதிரியான படங்களை செய்து உச்சத்தில் இருக்கிறார்கள். இருவருக்கும் பெரியளவில் நட்பு இல்லாததால், ரசிகர்கள் அடிக்கடி மோதி கொள்வார்கள். 

- Advertisement -

ஆனால் சமீப காலங்களாக அஜித் – விஜய் இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகிறார்கள். அஜித் குமார் பெரியளவில் மற்ற நடிகர்களின் படங்களை விரும்பி பார்க்க மாட்டார். ஆனால் ரகசியமாக சில நேரங்களை சினிமாவுக்கு சென்று பார்க்கும் வழக்கம் அஜித் குமாரிடம் உள்ளது. அந்த வகையில் விஜயின் ஒரு படத்தை அஜித் குமார் ரகசியமாக பார்த்த சம்பவம் கசிந்துள்ளது. 

நடிகர் அஜித் குமாரை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என்று 4 படங்களை இயக்கியவர் இயக்குநர் சரண். இவர் ஒரு பேட்டியில், நடிகர் அஜித் குமாரும் நானும் ஏராளமான படங்களை ரகசியமாக யாருக்கும் தெரியாமல் பார்த்திருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரார்த்தனா ட்ரைவ் இன் இருக்கும். அங்கு சென்று காரில் படுத்துக் கொண்டே பார்ப்போம்.

- Advertisement -

அப்படித்தான் ஒருமுறை விஜய் நடித்த வில்லு படத்தை பார்த்தோம். அந்த படம் பார்த்த பின் நடிகர் அஜித் குமார், போட்டி நடிகர் என்பதால் எந்த குறையும் சொல்லவில்லை. ஏனென்றால் பிரபுதேவா – விஜய் காம்பினேஷனில் போக்கிரி படத்திற்கு பின் வில்லு வெளி வந்தது. சில மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும், படம் முடிந்த பின் அஜித் குமார் எந்த கருத்தும் சொல்லவில்லை.

- Advertisement -

ஒரு ரசிகரின் மனநிலையில் தான் அஜித் குமார் அனைத்து படங்களையும் பார்ப்பார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் விஜயின் காதலுக்கு மரியாதை திரைப்படம் நடிகர் அஜித் குமாருக்கு ரொம்ப பிடிக்கும், பூவே உனக்காக திரைப்படத்தில் விஜயின் காமெடியை அஜித் குமார் ரசித்ததை வெளிப்படையாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular