Saturday, November 23, 2024
- Advertisement -
HomeEntertainmentஇதுக்காக என்னை கலாய்க்கிறாங்களா.. கவலைபடவே மாட்டேன்.. கொந்தளித்த புரட்சி தளபதி விஷால்!

இதுக்காக என்னை கலாய்க்கிறாங்களா.. கவலைபடவே மாட்டேன்.. கொந்தளித்த புரட்சி தளபதி விஷால்!

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் மூலமாக நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. அதேபோல் ஓடிடியிலும் பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த படத்திற்கு பின் நடிகர் விஷால் அடுத்தடுத்து பல்வேறு படங்களில் தீவிரம் காட்டி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். அதேபோல் யோகி பாபு, கெளதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். 

ரத்னம் திரைப்படத்தில் மருத்துவராக நடிக்கும் விஷால், மணல் மாஃபியாவை எதிர்த்து போராடுவது போல் கதையமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் மே 26ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் விஷால் சாப்பிடுவதற்கு முன்பாக 3 கடவுளையும் கும்பிட்டு சாப்பிடும் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் பேசுபொருளாகின. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலை கிண்டல் செய்து வருகின்றனர். விஷால் சொந்த வாழ்க்கையிலும் நடிக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்ய தொடங்கினர்.

- Advertisement -

இதுகுறித்து புரட்சி தளபதி விஷால் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், சாப்பிடுவதற்கு முன் அனைத்து கடவுளையும் வணங்கிவிட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதற்காக என்னை ட்ரால் செய்பவர்கள் பற்றி எந்த கவலையும் கிடையாது. அதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது ரத்னம் படத்தின் பிரஸ்மீட்டின் போது கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Popular