Wednesday, November 20, 2024
- Advertisement -
HomeEntertainmentகங்குவா கதையை நான்கு ஆண்டுகளாக உருவாக்கினேன்; படத்தின் ரிலீஸ் தேதி என பல்வேறு விஷயங்களை பகிர்ந்த...

கங்குவா கதையை நான்கு ஆண்டுகளாக உருவாக்கினேன்; படத்தின் ரிலீஸ் தேதி என பல்வேறு விஷயங்களை பகிர்ந்த சிறுத்தை சிவா

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தின் திரைக்கதையை முடிக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

10 மொழிகளில் உருவாகும் கங்குவா

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஷுட்டிங் நடைபெற்ற ‘வணங்கான்’ படத்தில் இருந்து சில காரணங்களால் நடிகர் விலகினார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 42வது பட அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்னும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது.

இந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா ஜோடியாக திஷா பதானியும் காமெடி கேரக்டரில் யோகி பாபுவும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கொடைக்கானல் வனப்பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.

- Advertisement -

கவனத்தை ஈர்க்கும் கங்குவா

இந்நிலையில் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய காலத்துக்கும், முந்தைய பிறவிக்கும் உள்ள தொடர்புதான் கங்குவா திரைப்படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது. சூர்யாவுக்கு வித்தியாசமான திரைப்படமாக கங்குவா இருக்கும் என்றும், படத்தின் சிஜி பணிகள் மும்பையில் நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

- Advertisement -

4 ஆண்டுகளாக உருவாகிய திரைக்கதை

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, இந்த படத்தின் கதையை நான்கு ஆண்டுகளாக எழுதியதாக கூறினார். கங்குவா என்றால் நெருப்பு என்று கூறிய அவர், அடர்ந்த காடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்தியதாக பேசினார். இதற்காக வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததாகவும், நடிகர் சூர்யா 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்றும் தெரிவித்தார்.

கங்குவாவில் நிறைய போர் காட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். படத்தின் தரத்திற்கே நாங்கள் கவனம் செலுத்துவதாக கூறிய சிவா, தங்களுக்கு இதில் திருப்தி ஏற்பட்டதும் வெளியீட்டுக்கான தேதி குறித்து அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

Most Popular