Monday, October 7, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோ இடைவேளை வரை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் லலித் என்ன பண்ணார் தெரியுமா… அவரே சொல்லிருக்கார் பாருங்க!

லியோ இடைவேளை வரை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் லலித் என்ன பண்ணார் தெரியுமா… அவரே சொல்லிருக்கார் பாருங்க!

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். வேறு எந்த ஒரு விஜய் படத்திற்கும் இல்லாத அளவுக்கு, லியோ மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் என்னும் ஒரு பெயர்தான். இதற்கு முன்பு மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை கொடுத்த லோகேஷ், லியோ எப்படி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

தனது முந்தைய திரைப்படமான விக்ரமில், கைதி பட கதாபாத்திரங்களை கொண்டு வந்து, ஆச்சரியமூட்டினார் லோகேஷ். இதற்கு லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என ரசிகர்கள் பெயர் சூட்ட, லியோவும் இதன் கீழ்தான் வருவதாக கூறப்படுகிறது. இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், ஜேம்ஸ் தாமஸ், சான்டி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்தனை பேருக்கும் லோகேஷ் எந்த மாதிரியான கதாபாத்திரங்களை கொடுத்திருப்பார் என்பதை நினைக்கும் போதே மலைக்க செய்வதாக பலரும் கூறி வருகின்றனர். இதில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், விஜய்க்கு அடுத்தபடியாக அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத்திற்கு லோகேஷ் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சஞ்சய் தத், ஆன்டணி தாஸ் எனும் கேரக்டரிலும், அர்ஜுன் ஹரால்டு தாஸ் ரோலில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இது பக்கம் இருக்க, படம் தொடங்கிய நாள்முதல், தொடர்ந்து அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் தயாரிப்பாளர் லலித் குமார். காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு 60 நாட்கள் நடைபெற்றபோது, அதற்கான வீடியோவை வெளியிட்டு உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நா ரெடிதான் பாடலும் வெளியானது. ஆனால் தற்போது இந்த பாடலில் மது மற்றும் புகைபிடிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை குழு சில வரிகளை நீக்கியுள்ளது.. இதனால் திரையரங்குகளில் அதற்கு பதில் வேறு வரிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட அறிமுக விழாவில் லியோ தயாரிப்பாளர் லலித்குமார் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், லியோ படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டதாகவும், மிக நன்றாக வந்துள்ளது என்றும் கூறினார். இதனை விஜய் சார் இன்னும் பார்க்கவில்லை. படத்தின் அப்டேட் அடுத்த வாரம் முதல் வெளியிடப்படும். இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில்தான் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Most Popular